பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயருகிறது: முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) அதன் அதிகரித்து வரும் செலவினங்களை ஈடுகட்ட தண்ணீர் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதிகபட்சமாக லிட்டருக்கு ஒரு காசு அதிகரிக்கப்படும். மாதம் 8 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்துவோருக்கு 0.15 காசுகளும், 8 ஆயிரம் லிட்டரில் இருந்து … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்க பதக்கம் வென்ற சித்து

பியுனோஸ் அயர்ஸ், அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரரான விஜய்வீர் சித்து, ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார். தொடக்கம் முதல் அபார திறமையுடன் விளையாடிய சித்து, அடுத்தடுத்து புள்ளிகளை சேர்த்து முன்னிலை பெற்றார். அவர் இந்த போட்டியில் இறுதி வரை விடாப்பிடியாக முன்னிலை பெற்று, சக போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். இதனால், போட்டியின் முடிவில், … Read more

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

விர்ஜீனியா, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த விர்ஜீனியா மாகாணத்தில் ஸ்பாட்சில்வேனியா கவுன்டி பகுதியில் டவுன்ஹவுஸ் வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த பகுதி வாஷிங்டன் நகரில் இருந்து தென்மேற்கே 105 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் … Read more

தமிழ்நாடு, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் – அமித்ஷா

புதுடெல்லி, வரவிருக்கும் தமிழ்நாடு, பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்று மத்திய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்குகள் குறைந்தது. பிரதமர் மோடிக்கு அதிக வாக்குகள் கிடைக்காதது குறித்து வாக்காளர்கள் வருந்தினர். எனவே அரியானா, டெல்லி தேர்தலில் அவர்கள் அதிகமாக வாக்களித்து வெற்றி பெற … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள்;- குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்ட், … Read more

தைவானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

தைபே, தைவான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரை நகரான இலன் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலன் நகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் 69 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில விநாடிகள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த நில நாட்களுக்குமுன் மியான்மரில் … Read more

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி 31 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் அந்த சிறுமி, கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு … Read more

சென்னை அணிக்கு எதிராக சாஹல் ஒரு ஓவர் மட்டும் வீசியது ஏன்? ஸ்ரேயாஸ் விளக்கம்

முல்லன்பூர், ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் … Read more

சீனா: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 20 பேர் பலி

பெய்ஜிங், வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டனர். … Read more