அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு – இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 2 மாதத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை 2 மாதத்திற்கு நீட்டித்து … Read more

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்: புதின் அதிரடி

மாஸ்கோ, சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க … Read more

உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்று சாதனை

பாண்டேவெட்ரா, 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள பாண்டேவெட்ரா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரீகோ ரோமன் பந்தயத்தில் 77 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீரர் சஜன் பன்வாலா கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மால்டோவா நாட்டு வீரர் அலெக்சான்ட்ரின் குதுவிடம் 0-8 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். சஜனை வீழ்த்திய அலெக்சான்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் ‘ரெபிசாஜ்’ சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற … Read more

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? – ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்

புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் … Read more

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஹோபர்ட், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஸ்காட்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அந்த நம்பிக்கையுடன் அந்த அணி இன்று களம் இறங்குகிறது. அதே வேளையில் அயர்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி கண்டிருந்தது. எனவே அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக … Read more

அமெரிக்க விமானத்தில் திடீரென தோன்றிய பாம்பு – பயணிகள் பீதி

நியூ ஜெர்சி, புளோரிடாவின் தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் ‘யுனைடெட் ப்ளைட் 2038’-ல் இருந்த கார்டர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை … Read more

ரூ.1500 கடனை திருப்பி தராததால் இளைஞர் கையில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்…!

கட்டாக், ஒரிசாவின், கட்டாக் நகரில் பெஹரா (வயது 22) என்ற இளைஞர், ரூ.1,500 கடனாக வாங்கியுள்ளார். 30 நாட்களில் திருப்பித் தருவதாக கூறி வாங்கிய அவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், கடன் கொடுத்த 2 இளைஞர்கள், பெஹராவின் கைகளை 12 அடி நீள கயிற்றால் கட்டி, அதன் மறுமுனை இரு சக்கர வாகனத்துடன் இணைத்து, ஸ்டூவர்ட்பட்னா சதுக்கத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுதாஹத் சதுக்கம் வரை சுமார் 20 நிமிடங்களுக்கு அவர்கள் பின்னாலேயே ஓட … Read more

20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள் போட்டிக்கு தயாராகும் பொருட்டு தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி … Read more

தொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா

சியோல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்திவரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் … Read more

கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அகற்ற கூறிய போலீசை நடுரோட்டில் புரட்டி எடுத்த நபர்

போபால், மத்தியபிரதேச மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் வகையிலான ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்டவேண்டும் என்று விதி உள்ளது. விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. காரின் உள்ளே பயணிப்பவர்கள் யார்? என்பதே தெரியாத வகையில் மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்ட அங்கு பணியில் … Read more