உலக அளவில் திடீரென முடங்கிய டுவிட்டர், யூடியூப் – பயனாளர்கள் அவதி…!

வாஷிங்டன், டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ளது. இந்த இணையதள பக்கங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடங்கின. இதனால், டுவிட்டர் மற்றும் யூடியூபை பயன்படுத்தமுடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் டுவிட்டர், யூடியூப் சேவை முடங்கியது.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய டுவிட்டர், … Read more

ஆப்கானிஸ்தான் சூழ்நிலை அண்டை நாடுகளுக்கு கவலைக்குரியது – மத்திய அரசு

புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் இந்தியா-மத்திய ஆசியா நாடுகள் இடையே சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கஜகஸ்தான், உஸ்பகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.   இந்நிலையில், இந்தியா – மத்திய … Read more

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி புனேரி பல்டன் வெற்றி

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பண்டன் அணிகள் மோதின.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனேரி பல்டன் 27-45 என்ற புள்ளிகள் கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து பாட்னா பைரேட்ஸ்- உ.பி.யோத்தா அணிகள் மோதின. இரவு 8.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-41 என்ற புள்ளிகள் … Read more

ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலையளிக்கிறது: வெளியுறவுத் துறை இணை அமைச்சர்

புது டெல்லி,  ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, அண்டை நாடுகளுக்கு கவலையை அளிப்பதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் அவர் கூறும்போது, மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. உச்சிமாநாட்டில், மனிதாபிமான உதவி, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் குறித்த பிரச்சினைகள் அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலையை அளிப்பதாக பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் … Read more

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி நிதி – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு தொடர்ச்சியை குறிக்கிறது. இது பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, வரிவிதிப்பு முன்கணிப்பு ஆகியவற்றை கொண்டு வருகிறது. பட்ஜெட்டின் நோக்கம், பொருளாதாரத்தில் நிலையான, நீடித்து நிற்கத்தக்க மீட்புதான். 2008-09 நிதி நெருக்கடியின்போது சில்லரை பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்தது. இருப்பினும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற கொரோனா வைரஸ் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி தன்னுடைய 8வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் ஜேவியர் … Read more

அமெரிக்கா தங்கள் நோக்கங்கள் நிறைவேற பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டது – இம்ரான்கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3-ம் தேதி முதல் 6 வரை சீனா சென்றார். அங்கு பிஜீங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இம்ரான்கான் பங்கேற்றார். சீன பயணத்தின் போது இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், தேவைப்படும்போது அமெரிக்கா பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்துகிறது. இதனால், ரஷியாவுக்கு பாகிஸ்தான் எதிரியாகிறது.  தங்கள் நோக்கங்கள் … Read more

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு..!

புதுடெல்லி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 22.54 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை மக்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-  புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். குறிப்பாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், மது … Read more

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை "ஒயிட் வாஷ்" செய்தது

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் … Read more

நேபாளத்தில் காலணி கடையில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு

லும்பினி, நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் துளசிபூர் நகரில் காலணி கடை ஒன்று அமைந்து உள்ளது.  இந்நிலையில், கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  தீ விபத்தில் 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அவர்கள் சஜிதா கட்டூன் (வயது 13), ஹசன் பக்ஷ் (வயது 14), மசின் … Read more