உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது- ஜோ பைடன் கண்டனம்

வாஷிங்டன், கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் முன்பே அறிமுகம் ஆனவர்கள்; போலீசார் அறிக்கை

சிம்லா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி இமாசல பிரேதச போலீசார் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சி தெரிவிக்கின்றது. 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை என கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பற்றி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, 895 வழக்குகள் மாநிலத்தில் பதிவாகி உள்ளன. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பெருமளவில், பாதிக்கப்படுபவர்களுக்கு முன்பே நன்றாக தெரிந்த நபர்களாக உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. … Read more

ஓசூர்: சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைத்தார் டோனி

ஓசூர், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம் மற்றும் சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டு இளம் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த அகாடமி மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.டோனி குளோபல் பள்ளியில் உள்ள மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சிறப்பு விருந்தினராக கலந்து … Read more

உக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி

கீவ், உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் மின்உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் முயற்சித்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா, 11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று (திங்கட்கிழமை) பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த இரு சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அண்மையில் தூரந்த் கோப்பை … Read more

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: மத்திய வெளியுறவு மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு

கேன்பெர்ரா, நியூசிலாந்துக்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அதனை முடித்து கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அந்நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்து உள்ளார். அவருக்கு, இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் வகையில் நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய … Read more

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை எளிதில் வென்றது நியூசிலாந்து

கிறைஸ்ட்சர்ச், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது லீக்கில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் டிவான் … Read more

நைஜீரியாவில் படகு விபத்து: 76 பேர் பலி; அதிபர் இரங்கல்

அபுஜா, நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் படகு சிக்கி கொண்டது. இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறினர். நீச்சல் தெரியாத பலரும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் 76 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு மற்றும் நிவாரண பணி குழுக்களை சேர்ந்தவர்கள் சம்பவ … Read more

குஜராத் சட்டசபை தேர்தல்; சொந்த கட்சி தோல்வி அடைய பா.ஜ.க.வில் பல தலைவர்கள் விருப்பம்: கெஜ்ரிவால் பேச்சு

தரம்பூர், குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். … Read more

ஜோகோவிச் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

அஸ்தானா, அஸ்தானா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) சாய்த்து கோப்பையை கைப்பற்றினார். இந்த ஆண்டில் ஜோகோவிச்சுக்கு இது 4-வது மகுடமாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற பட்டங்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது. அதிகம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள … Read more