ஆமதாபாத்தில் இன்று காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் – சோனியா, ராகுல் பங்கேற்பு

ஆமதாபாத், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மாநிலத் தலைவர்கள் என நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 1995 முதல் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் … Read more

சிங்கப்பூர் பள்ளியில் பயங்கர தீ விபத்து; உடல்கருகி 10-வயது சிறுமி பலி

சிங்கப்பூர், சிங்கப்பூர் பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி 10 வயது சிறுமி ஒருவர் பலியானார். மேலும் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் மகன் உள்பட 20 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். சிங்கப்பூர் புறநகர் பகுதியில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதே கட்டிடத்தில் சினிமா தியேட்டர் வளாகமும், ரோபோடிக் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. நேற்று திடீரென இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து … Read more

கர்நாடகாவில் பாட்டில் குடிநீர் தரமற்றது – மந்திரி அளித்த விளக்கத்தால் அதிர்ச்சி

பெங்களூரு, பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், “கர்நாடகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் ரசாயனம் கலந்து இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாநிலம் முழுவதும் 296 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டது. அவற்றில் 255 குடிநீர் பாட்டில்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் 72 குடிநீர் பாட்டில்களில் இருந்த நீர் பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது. 95 குடிநீர் பாட்டில்களில் உள்ள நீர் பாதுகாப்பற்றது என்றும், 88 பாட்டில் நீர் … Read more

கான்வே போராட்டம் வீண்: சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. முல்லான்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார். ஆனால் சென்னை … Read more

விமானத்தில் பெண்ணுக்கு திரும்ப, திரும்ப பாலியல் தொந்தரவு அளித்த இந்திய வம்சாவளி நபர்

நியூயார்க், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பெல்கிரேடு நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகர் நோக்கி அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறந்து சென்றது. அப்போது, நடுவானில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரிடம் பவிஷ் குமார் தஹியாபாய் சுக்லா என்பவர் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அந்த பெண் தன்னுடைய கணவரிடம் மொபைல் போன் வழியே குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமானம் … Read more

கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்.. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு, பெங்களூரு ஹெப்பால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியை சேர்ந்தவர் பஷிர்(வயது 33). இவர் விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாஹர் அஸ்மா(29). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் முடிந்தது. குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பஷிருக்கும், ஹெப்பாலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அஸ்மா, தனது கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன், … Read more

சேசிங்கில் தொடரும் சோகம்.. தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் கூறியது என்ன..?

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. தோல்வி குறித்து கருத்து தெரிவித்த … Read more

அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்கிறது – எச்சரிக்கை விடுத்த சீனா

பீஜிங், அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்காள தேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 … Read more

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு.. 15-ந்தேதி விசாரணை

புதுடெல்லி, நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்கு படுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத் தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முசல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டையும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்படி நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா கூட்டணி … Read more