ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ்

முல்லாப்பூர், 18-வது ஐ.பி.எல். தொடரில் முல்லாப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 206 ரன் இலக்கை … Read more

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி

கீவ், உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.இதற்கிடையே போரை … Read more

பாஜக தொண்டர்களின் ஆற்றலும் உற்சாகமும் என்னை ஊக்கமளிக்க செய்கின்றன – பிரதமர் மோடி

புதுடெல்லி, 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாரதிய ஜனதா கட்சி துவக்கப்பட்டது. ஆண்டுதோறும் அதே நாளில் கட்சி துவக்க விழாவை பாஜக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பாஜக தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் தொண்டர்களுக்கு வாழ்த்துகள். கடந்த பல தசாப்தங்களாக நமது கட்சியை வலுப்படுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ந்த பாரதத்தின் கனவை நனவாக்கவும் நமது இணையற்ற … Read more

2023 ஐ.பி.எல். முடிந்தவுடன் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – மனோஜ் திவாரி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னையை அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி காண பேட்டிங்கின் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததே முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் தோனி மற்றும் விஜய் சங்கர் இருவரும் மெதுவாக … Read more

மியான்மர் நிலநடுக்கத்திற்கு 30 லட்சம் பேர் பாதிப்பு; ஐ.நா. தகவல்

யாங்கன், மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை உடனடியாக அரசு பிறப்பித்தது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனை … Read more

காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்: கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்

பெலகாவி, கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் மற்றும் கொடூரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது கணவரின் கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவனகவுடா பட்டீல் (வயது 43). இவரது மனைவி ஷைலா (38). ஷைலாவுக்கு பலோகி பகுதியை சேர்ந்த ருத்ரப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவர் இடையேயும் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் … Read more

தொடரின் ஆரம்பத்திலேயே தோல்வி வந்தது நல்ல விஷயம் – ஸ்ரேயாஸ் ஐயர்

முல்லன்பூர், ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் … Read more

அமெரிக்காவுக்கு 10 சதவீதம் ஆடை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

வாசிங்டன், அமெரிக்காவால் இந்தியாவுக்கு 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஆடைத்துறையில் கடும் போட்டியாளர்களாக உள்ள வியட்நாமுக்கு 46 சதவீதம், இலங்கைக்கு 44 சதவீதம், வங்கதேசத்துக்கு 37 சதவீதம் சீனாவுக்கு 34 சதவீதம் என்ற அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கான செலவு, போட்டி த்தன்மையை ஒப்பிட்டால் இது இந்தியாவுக்கு மிகத்தெளி வாக பெரும் நன்மையை தரும். கடந்த காலத்தில் பருத்தி ஆடை ஏற்றுமதிக்கு இந்தியாவை போலவே வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் வரியை எதிர்க்கொள்ள வேண்டி … Read more

மியான்மர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது

நைப்பியிதோ, மியான்மர் நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, நிலநடுக்கத்தால் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் … Read more

கனடாவில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் கத்தியால் குத்தி படுகொலை

ஒட்டாவா, கனடாவின் ஒட்டாவா நகரருகே ராக்லேண்ட் பகுதியில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இதுபற்றி இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், கத்தி குத்து தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான சோக சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என போலீசார் குறிப்பிட்டு … Read more