பொலிவியா: டிரைவரின் குடிபோதையால் விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்; 37 பேர் பலி

சுக்ரி, பொலிவியா நாட்டில் ஆருரோ பகுதியில் பெரிய திருவிழா கொண்டாட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சிலர் பஸ்களில் புறப்பட்டனர். அப்போது, அவற்றில் ஒரு பஸ் பொடோசி என்ற பகுதியில் வந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது. உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே சென்றபோது அந்த சுற்றுலா பஸ், எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பொடோசி காவல் துறையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இந்த … Read more

இன்னும் ஒரு மாதத்தில்… இந்திய ரெயில்வேக்கு அதி நவீன, சக்தி வாய்ந்த என்ஜின்

புதுடெல்லி, குஜராத்தின் தஹோத் நகரில் உள்ள ரெயில்வே பணிமனைக்கு சென்ற மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆலையில் நடந்து வரும் உற்பத்தி சார்ந்த பணிகளை பார்வையிட்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 89 சதவீத உப பொருட்களை கொண்டு ரெயில் என்ஜின் உருவாகி வருகிறது. குஜராத்தில் முதன்முறையாக இந்த வசதி சாத்தியப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்புகளாக இந்த என்ஜின்கள் இருப்பதற்காக நம்முடைய என்ஜினீயர்களும் மற்றும் தொழில்நுட்ப … Read more

சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: உண்மையிலேயே ஏமாற்றமளிக்கும் செயல்திறன் – ஜாஸ் பட்லர் பேட்டி

லாகூர், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29.1 … Read more

காசாவில் போர் நிறுத்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க இஸ்ரேல் ஒப்புதல்

ஜெருசலேம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அவை முயற்சியால், இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் … Read more

பாகிஸ்தானில் 20 பயங்கரவாதிகள் கைது – 6 கிலோ வெடி மருந்து பறிமுதல்

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்லையோர மாகாணங்களில் அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 6 கிலோ வெடி மருந்து, 20 வெடிகுண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. … Read more

டிரம்புடன் வெடித்த வார்த்தை போர்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவு

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் … Read more

லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்: உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப்

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் … Read more

உடல்நிலையில் முன்னேற்றம்: அபாய கட்டத்தை தாண்டிய போப் பிரான்சிஸ்

வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த மாதம் 14-ந் தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்படும் போப் பிரான்சிசுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சையின் பலனாக போப் பிரான்சிசின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அவர் … Read more

வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு: கனிமவள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் அரசு இந்த போரை எதிர்கொண்டு வருகிறது. அதே சமயம், அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறார். முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். உக்ரைனில் 2019-ல் … Read more

பிலிப்பைன்ஸ்: சுறா தாக்கி ரஷிய சுற்றுலா பயணி உயிரிழப்பு

மணிலா, பிலிப்பைன்ஸ் படங்காஸ் மாகாணத்தில் லுசோன் தீவு அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து செல்வர். அந்தவகையில் ரஷிய சுற்றுலா பயணிகள் 4 பேர் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் படகில் சென்று அங்குள்ள கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை அவர்களை அடித்துச்சென்றது. இதில் இருவர் படகு மூலம் பத்திரமாக கரை திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். அதே சமயம் மற்றொரு நபரை சுறா மீன் தாக்கி இழுத்துச் சென்றது. … Read more