புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் சேவை ரத்து

புதுச்சேரி, புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16112) ரெயில் மதியம் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் . இந்த ரெயில் (இன்று) ஏப்ரல் 05, 2025 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16111) ரெயில் 4 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும். இந்த ரெயில் ஏப்ரல் 06, 2025 (நாளை) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. … Read more

ஐ.பி.எல்.2025: மும்பை அணியுடன் பும்ரா இணைவது எப்போது..? வெளியான தகவல்

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்ேவறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார். காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள … Read more

மராத்தி பேச வலியுறுத்துவது தவறு இல்லை: ஆனால்..முதல்-மந்திரி பட்னாவிஸ் எச்சரிக்கை

மும்பை, நவநிர்மாண் சேனா கட்சியினர் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மராத்தியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று தானே மற்றும் புனே மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று மேலாளரிடம் மராத்தி மொழியில் பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். மேலும் ஊழியர் ஒருவரையும் தாக்கினர். அதேபோல தனியார் வங்கி ஒன்றில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகைகளை அகற்றினர். இவர்கள் நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் … Read more

ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து

மவுண்ட் மவுங்கானுய், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த … Read more

தற்கொலை செய்த பா.ஜ.க. பிரமுகர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டு

பெங்களூரு, பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வந்தவர் வினய் சோமய்யா (வயது 35). குடகு மாவட்டத்தை சேர்ந்த இவர், பா.ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். ஹெண்ணூர் அருகே நாகவாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வினய் மேலாளராக பணியாற்றினார். பெரும்பாலும் வீட்டில் இருந்தே அவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வினய் நாகவாராவில் உள்ள அலுவலகத்திற்கு வேலைக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் … Read more

லக்னோ வீரர்கள் ரிஷப் பண்ட், திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிப்பு – காரணம் என்ன..?

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் … Read more

புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்

மும்பை, இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி உள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் கூறி உள்ளது. வெளியிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், … Read more

திலக் வர்மா 'ரிட்டயர்டு அவுட்' ஆனது குறித்து மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே ஓபன் டாக்

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் … Read more

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஒன்று முதல் மூன்று மீட்டர் வரை சுனாமி அலைகளை உருவாக்கும் என்று அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை … Read more

முயல் வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் தன்கனல் மாவட்டம் மன்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரசாத் நாயக். இவர் தனது நண்பர்களான பாபுலா நயல் உள்பட 4 பேருடன் நேற்று இரவு 11 மணியளவில் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டிற்குள் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். கள்ளத்துப்பாக்கியுடன் நண்பர்கள் அனைவரும் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். இரவு நேரத்தில் அனைவரும் ஒவ்வொரு புறமும் முயலை தேடி அழைந்துள்ளனர். இரவு என்பதால் போதிய வெளிச்சமின்மை நிலவியுள்ளது. அப்போது, புதர் படந்த இடத்தின் அருகே பாபுலா … Read more