அமெரிக்க வெளியுறவு மந்திரி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு

வாஷிங்டன், அமெரிக்கா நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து நாட்டின் வெளியுறவு மந்திரியாக மார்கோ ரூபியோ பதவியேற்றார். இந்தநிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பாக மார்கோ ரூபியோ கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி வாஷிங்டனில் உள்ள ராணுவ முகாம் விமான தளத்தில் இருந்து அவருடைய விமானம் புறப்பட்டது. அமெரிக்கா எல்லைக்குட்பட்ட பகுதியில் நடுவானில் அந்த விமானம் பறந்து … Read more

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்

புதுடெல்லி, வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசிக்கும் – தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்துள்ள உறவை புதுப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி நடத்த ஏற்பாடு செய்தார். தற்போது காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வரும் 25ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஒடிசா எப்.சி

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஐதராபாத் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா அணி … Read more

பணய கைதிகள் விவகாரம்; இன்று மதியம் என்ன நடக்க போகிறது…? டிரம்ப் பதில்

வாஷிங்டன் டி.சி., இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த … Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

புதுடெல்லி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 8 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். சுமார் 44 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதையடுத்து இன்று முதல் தேர்வானது தொடங்க உள்ளது. தினத்தந்தி Related Tags : பொதுத்தேர்வு  சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு  சிபிஎஸ்இ  சிபிஎஸ்இ … Read more

மகளிர் பிரீமியர் லீக்; மும்பை – டெல்லி அணிகள் இன்று மோதல்

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் … Read more

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன்? – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

புதுடெல்லி, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த நோட்டீசை ரத்து செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய … Read more

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்; வெற்றியோடு தொடங்கியது பெங்களூரு

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் இன்று தொடங்கியது. வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் … Read more

அடுத்த மாதம் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் விலோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ளனர். 8 நாள் பயண திட்டத்துடன் விண்வெளி நிலையத்திற்கு சென்ற இருவரும் தற்போது வரை மீட்கப்படவில்லை. அவர்கள் இருவரையும் பூமிக்கு … Read more