சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பி.சி.சி.ஐ.

மும்பை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் … Read more

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்றார். அப்போது முதல் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது, இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. டிரம்பின் இந்த அதிரடிகள் இந்தியாவையும் பாதித்து உள்ளன. குறிப்பாக டிரம்பின் உத்தரவின்பேரில் சட்ட விரோதமாக … Read more

மணிப்பூரில் 2 வீரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு சிஆர்பிஎப் வீரர் தற்கொலை

மணிப்பூரின் மேற்கு இம்பாலில் நேற்று இரவு 8 மணிக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர், சக சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் மரணமடைந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சக சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய சி.ஆர்.பி.எஃப் காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் இப்படி ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்…? தலைமை பயிற்சியாளர் பதில்

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கின்றன: டிரம்ப் ஆதங்கம்

வாஷிங்டன், அமெரிக்க பொருட்கள் மீது நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதி வரி பொருட்களுக்கு, அந்த நாடு எவ்வளவு வரியை அமெரிக்க பொருட்கள் மீது விதித்ததோ அதற்கு நிகராக அமெரிக்காவும் இறக்குமதி வரியை விதிக்கும். இதற்கான சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டொனால்டு டிரம்ப், நட்பு நாடுகளே அமெரிக்கவிற்கு எதிராக இருப்பதாகவும் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடபாக டிரம்ப் கூறுகையில், இந்தியாவில் வணிகம் செய்ய எலன் … Read more

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அறிக்கை: மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி, வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வக்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படடது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு 30-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி மசோதா தொடர்பாக … Read more

ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன்: இந்தியா காலிறுதிக்கு தகுதி

கியாங்டா, ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதன் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மக்காவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 … Read more

அமெரிக்காவின் தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு பதவியேற்பு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். பல்வேறு பதவிகளுக்கும் முக்கிய நபர்களை நியமனம் செய்து வருகிறார். இதன்படி, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், முறைப்படி … Read more

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி, மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தேர்தல் கமிஷனர்களின் நியமனத்திற்கு எதிராக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கு எதிரான சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தத மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு வருகிற … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

அகமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற … Read more