ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன்: இந்தியா காலிறுதிக்கு தகுதி

கியாங்டா, ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதன் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மக்காவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 … Read more

அமெரிக்காவின் தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு பதவியேற்பு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். பல்வேறு பதவிகளுக்கும் முக்கிய நபர்களை நியமனம் செய்து வருகிறார். இதன்படி, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், முறைப்படி … Read more

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி, மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தேர்தல் கமிஷனர்களின் நியமனத்திற்கு எதிராக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கு எதிரான சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தத மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு வருகிற … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

அகமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற … Read more

வங்கதேசம்: வன்முறையால் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்- ஐநா அறிக்கை

ஜெனீவா, வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரையிலான மூன்றே வாரங்களில் மட்டும், உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,400-ஐ தாண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. . அந்நாட்டின் … Read more

மேற்கு வங்காளம்: ரூ.3.89 லட்சம் கோடி அளவிலான பட்ஜெட் தாக்கல்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு அளவிலான மாநில பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்து பேசினார். இந்த பட்ஜெட், சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிததல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரூ.3.89 லட்சம் கோடி அளவிலான இந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பையை வீழ்த்திய எப்.சி.கோவா

மும்பை, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. – எப்.சி. கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி இரண்டு கோல்கள் அடித்து அசத்தியது. இதன் மூலம் முதல் பாதியில் 2-0 என கோவா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது … Read more

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

வாஷிங்டன், 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவுக்கு நேற்று புறப்பட்டார். தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாஷிங்டன் டிசி நகருக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்க திரண்டு இருந்தனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு … Read more

புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

புதுடெல்லி எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- புதிய வருமான வரி மசோதா 536 … Read more

அகமதாபாத் மைதானத்தில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்

அகமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற … Read more