ராம நவமி: வாழை இலையில் வரையப்பட்ட அயோத்தி பாலராமர்

அமராவதி, மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி ஆகும். அதில் 7-வது அவதாரமாகக் கருதப்படும் ராமா், நவமி திதியில் பிறந்தாா். அவரின் அவதார தினமான ராம நவமி விழாவை பக்தர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் புருஷோத்தமன் என்பவர் வாழை இலையில் அயோத்தி பாலராமர் உருவத்தை வரைந்து அசத்தி … Read more

சார்லஸ்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கலிபோர்னியா, பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெகுலா 6-2, 2-6 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இறுதிப்போட்டியில் சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோத உள்ளார். தினத்தந்தி Related Tags : Tennis  … Read more

ஸ்கூட்டரை வழிமறித்து நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசவாடி ஹெண்ணூர் மெயின் ரோட்டில் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர் தனது தோழி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று ஸ்கூட்டரை மர்மநபர்கள் வழிமறித்தனர். பின்னர் 2 மர்மநபர்களும், நடுரோட்டில் வைத்து ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணின் உடலை தொட்டு சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை … Read more

மும்பை அணியுடன் இணைந்த பும்ரா… ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார். காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் … Read more

பீகார்: கார் – லாரி மோதி விபத்து – 4 பேர் பலி

பாட்னா, பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 7 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரமோத் சிங், அவரது மகன் … Read more

ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ்

முல்லாப்பூர், 18-வது ஐ.பி.எல். தொடரில் முல்லாப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 206 ரன் இலக்கை … Read more

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி

கீவ், உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.இதற்கிடையே போரை … Read more

பாஜக தொண்டர்களின் ஆற்றலும் உற்சாகமும் என்னை ஊக்கமளிக்க செய்கின்றன – பிரதமர் மோடி

புதுடெல்லி, 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாரதிய ஜனதா கட்சி துவக்கப்பட்டது. ஆண்டுதோறும் அதே நாளில் கட்சி துவக்க விழாவை பாஜக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பாஜக தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் தொண்டர்களுக்கு வாழ்த்துகள். கடந்த பல தசாப்தங்களாக நமது கட்சியை வலுப்படுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ந்த பாரதத்தின் கனவை நனவாக்கவும் நமது இணையற்ற … Read more

2023 ஐ.பி.எல். முடிந்தவுடன் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – மனோஜ் திவாரி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னையை அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி காண பேட்டிங்கின் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததே முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் தோனி மற்றும் விஜய் சங்கர் இருவரும் மெதுவாக … Read more

மியான்மர் நிலநடுக்கத்திற்கு 30 லட்சம் பேர் பாதிப்பு; ஐ.நா. தகவல்

யாங்கன், மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை உடனடியாக அரசு பிறப்பித்தது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனை … Read more