காசா போர் நிறுத்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்துவது எப்படி? பேச்சுவார்த்தை தொடங்கியது

காசா: இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதன்படி காசாவில் போரை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. முழுமையான போர்நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் பணயக் கைதிகளை … Read more

சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர் கைது

புதுடெல்லி, சத்தீஷ்காரில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதில், சத்தீஷ்கார் அரசால் தடை செய்யப்பட்ட மூல்வாசி பச்சாவோ மன்ச் (எம்.பி.எம்.) என்ற நக்சல் அமைப்பை சேர்ந்த ரகு மிதியாமி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுபற்றி என்.ஐ.ஏ. அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த தடை செய்யப்பட்ட எம்.பி.எம். என்ற அமைப்பானது நிதி சேகரிப்பு, பதுக்கி வைத்தல் மற்றும் தேச … Read more

சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

லாகூர், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து செடிகுல்லா அடல் களம் புகுந்தார். மறுபுறம் இப்ராகிம் … Read more

வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தலிபான் ஆதவு மதகுருமார்கள் மையத்திற்குள் உள்ள ஒரு மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 5 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி … Read more

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டிருந்த 35 வயது பெண்ணை சிறுத்தை கடித்து கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி துஷ்யந்த் குமார் கூறுகையில், சவுதேரி கிராமத்தை சேர்ந்த சுமன் (35) என்ற பெண் நேற்று மாலை காட்டிற்கு சென்று திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று இரவு ஒரு வயலில் … Read more

இன்னும் ஒரே ஒரு அரைசதம்… சாம்பியன்ஸ் டிராபியில் மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த … Read more

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழா நாட்களில் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் வருகிறது. மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை … Read more

நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம் ஆனால்… – பாக். கேப்டன் முகமது ரிஸ்வான்

கராச்சி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி … Read more

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

காத்மாண்டு, நேபாளத்தில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 2.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.79 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 85.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of … Read more