அஸ்வின் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்..? தோனி விளக்கம்

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் கான்வே மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷேக் ரஷீத், ஜாமி ஓவர்டான் சேர்க்கப்பட்டனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக … Read more

இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது

டாக்கா, வங்காளதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து பின்னர் திரைத்துறையில் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரியும், மேஹ்னா ஆலமும் காதலித்து வந்துள்ளனர். அந்த தூதரக அதிகாரிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அதேவேளை, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தூதரக அதிகாரியான தனது காதலனிடம் மேஹ்னா ஆலம் கேட்டுள்ளார். ஆனால், மேஹ்னாவை திருமணம் செய்ய தூதரக அதிகாரி … Read more

அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவை சேர்ந்தவர் கிரண் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர்கள் 2 பேரும் பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதாவது 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் 2 பேரும் … Read more

ஐ.சி.சி. மார்ச் மாத சிறந்த வீரர் அறிவிப்பு.. யார் தெரியுமா..?

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நியூசிலாந்து வீரர்களான ஜேக்கப் டபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் மார்ச் … Read more

கால்பந்து வெற்றி கோப்பையை உடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி – வைரல் வீடியோ

வாஷிங்டன், அமெரிக்க துணை ஜனாதிபதியாக டேவிட் வென்சி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, அமெரிக்காவில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஓஹியோ மாகாண கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஓஹியோ அணி நேற்று வெற்றி கோப்பையுடன் வெள்ளைமாளிகைக்கு சென்றது. அங்கு துணை ஜனாதிபதி டேவிட் வென்சியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், வென்சியுடன் சேர்ந்து வீரர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். புகைப்படம் எடுக்கும்போது துணை ஜனாதிபதி வென்சி, … Read more

முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான நில முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு

பெங்களூரு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவருக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின் பேரில் நில முறைகேட்டில் மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் நில முறைகேட்டில் சித்தராமையா, அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்று கூறி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மைசூரு … Read more

சென்னைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் – லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். … Read more

ஹமாசுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணிநீக்கம்; மைக்ரோசாப்ட் அதிரடி

வாஷிங்டன், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வனியா அகர்வால் பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் அவர் பணியாற்றி வந்தார். இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50ம் ஆண்டு தினம் கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளான சத்ய நாதல்லா, பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், முஸ்தபா சுலைமான் உள்பட பலர் … Read more

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் தமர்குடா கிராமத்தில் நேற்று ஒரு குடும்பத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற உறவினர்களின் குழந்தைகளான தன்மியா ஸ்ரீ (வயது 5), அபிநயா ஸ்ரீ (வயது 4) நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், சுமார் 2 மணிநேரத்திற்குமேல் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீடு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் சிறுமிகளை தேடினர். அப்போது, … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

காத்மண்டு, நேபாள நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. அந்நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related … Read more