சாம்பியன்ஸ் டிராபி: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம் – இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் … Read more

வங்காள தேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அங்கு முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியில் உள்ளது. வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக போராட்டங்களும் மோதல்களும் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக் அவர் கூறியதாவது: அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி இருப்பதால், இளைய அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை … Read more

நிறைவு பெற்ற மகா கும்பமேளா… பிரயாக்ராஜ் மக்களுக்கு யோகி ஆதித்யநாத் நன்றி

லக்னோ, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் 13-ம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய பிரயாக்ராஜ் கும்பமேளா, சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் மகா … Read more

சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: இந்த தருணத்தில் எந்த முடிவையும் எடுக்க கூடாது – இங்கிலாந்து கேப்டன்

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 … Read more

கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

பெல்மோபான், அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள். தோழிகளான மூன்று பேரும் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களின் … Read more

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் அலங்கார வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர் (சோமாஸ்கந்த மூர்த்தி), காமாட்சி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகி தேர்) நடைபெற்றது. பஜனை கோஷ்டியினர் சங்கீர்த்தனங்கள் பாட, கலைஞர்களின் உற்சாகமான கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நகர வீதிகளில் தேர் வலம் வந்தது. அதன்பிறகு உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்திக்கும், காமாட்சி … Read more

இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்… இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

லாகூர், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா … Read more

தாய்லாந்து: பஸ் விபத்தில் சிக்கியதில் கல்வி சுற்றுலா சென்ற 18 பேர் பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து கிழக்கே பிரச்சின்பரி மாகாணத்தில் இன்று அதிகாலை இரட்டை மாடி கொண்ட பஸ் ஒன்று சாலையில் பயணித்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 49 பேர் கல்வி சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. மலையில் இருந்து உருண்டது. இந்த விபத்தில், 18 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு … Read more

மராட்டியம்: மனைவியை பிரித்த சந்தேகத்தில் மாமியாரை தீ வைத்து எரித்த மருமகன் பலி

புனே, மராட்டியத்தில் முலுண்டு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ண தாஜி அஷ்தாங்கர் (வயது 56). இவருடைய மாமியார் பாபி தாஜி உசாரே (வயது 72). கிருஷ்ண தாஜி டெம்போ ஓட்டுநராக பணி செய்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்னர், கணவரை பிரிந்து சென்று விட்டார். போரிவலி பகுதியில் உள்ள நோயாளி ஒருவரை கவனித்து கொள்வதுடன் அவருடனேயே தங்கி விட்டார். மனைவி திரும்பி வராத சோகத்தில், டெம்போவிலேயே கிருஷ்ண தாஜி வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகன் … Read more

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்த அணிகள்தான் முன்னேறும் – ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு

மெல்போர்ன், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more