நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
காத்மண்டு, நேபாள நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. அந்நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related … Read more