இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது

பிரஸ்சல்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழில் அதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். மெகுல் சோக்சிக்கு எதிராக இரண்டு பிடிவாரண்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்துள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சிசெல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது … Read more

தமிழ்புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

புதுடெல்லி, சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என வாழ்த்துவதாக” ஜனாதிபதி … Read more

அவர்களிடமிருந்துதான் எனக்கு நம்பிக்கை கிடைக்கிறது – பெங்களூரு கேப்டன் பேட்டி

ஜெய்ப்பூர், 18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 … Read more

6 மணி நேரத்தில்.. முப்பரிமாண ரெயில் நிலையத்தை உருவாக்கிய ஜப்பான்

டோக்கியோ, உலகின் முதல் 3D-அச்சிடப்பட்ட ரெயில் நிலையத்தை உருவாக்கியதன் மூலம் ஜப்பான் பொது உள்கட்டமைப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண … Read more

கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்கரா அடுத்த மஞ்சக்கரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவருடைய மனைவி சுபா பாய் (வயது 50). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தனியாக இருந்த போது, சமையலறையில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர் மின்சாரம் தாக்கி சுபா பாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு … Read more

டிரம்ப் முழு உடல் தகுதியுடன் உள்ளார் – வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை டாக்டர் கேப்டன் சீன் பார்பபெல்லா வழக்கமான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதில், டிரம்ப் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் இருப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பையும், தலைமை தளபதி பொறுப்பையும் கவனிக்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. … Read more

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

புதுடெல்லி, மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 18 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் 2-வது நாளாக நேற்றும் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர … Read more

உக்ரைன்: இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் ரஷியா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷியா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் உள்ள குசும் (Kusum) என்ற மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்கியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக கூறி வரும் … Read more

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா ஆவணி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவர் தனக்கு சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் சினையாக இருந்த அந்த பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டியை பார்த்து விவசாயி எல்லப்பா ஆச்சரியம் அடைந்தார். அதாவது அந்த கன்றுக்குட்டி 2 தலைகள், 4 கண்களுடன் இருந்தது. இதுபற்றி அவர் உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கால்நடை டாக்டர், அங்கு … Read more