கல்யாணத்திற்கு முகூர்த்த புடவை -வேட்டி சட்டை ரஜினிதான் கொடுத்தார்.. பெருமையுடன் சொன்ன ஆர்த்தி -கணேஷ்கர்!

சென்னை : சின்னத்திரை -பெரியத்திரை என்று மாறி மாறி நடித்து வருகின்றனர் நடிகை ஆர்த்தி மற்றும் நடிகர் கணேஷ். கணேஷ் தனது பெயரை கணேஷ்கர் என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் சீசன் 2வில் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது திருமண கலாட்டாக்களை சொல்லும் எபிசோடில் பங்கேற்றுள்ள இவர்கள் தங்களது திருமணம் எப்படி கலாட்டாவுடன் நடைபெற்றது என்பது குறித்து பகிர்ந்துள்ளனர். நடிகை … Read more

வைர பிரேஸ்லெட் திருடிய பிரிட்னி ஸ்பியர்ஸ் முன்னாள் கணவர்.. கொத்தாக தூக்கி கைது செய்த போலீஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீபத்தில் 3வது திருமணம் செய்துக் கொண்டார். பிரிட்னி ஸ்பியர்ஸின் முதல் கணவரான ஜேஸன் அலெக்சாண்டர் வைர பிரேஸ்லெட் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த வைர பிரேஸ்லெட்டின் மதிப்பு சுமார் 400 டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கணவர் பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இந்த ஆண்டு தனது பாய் பிரெண்ட் சாம் அஸ்காரி என்பவரை 3வதாக திருமணம் செய்து … Read more

\"மணிரத்னம் படத்தில் இதுக்காக மட்டும்தான் நடித்தேன்\": பாலிவுட் நடிகை ஓப்பன் டாக்.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான மனீஷா கொய்ராலா, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், உயிரே, ஆளவந்தான், பாபா உள்ளிட்ட படங்களில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ‘பம்பாய்’ படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார் மனிஷா கொய்ராலா. பாலிவுட் சூப்பர் குயின் 1991ல் வெளியான ‘செளதாகர்’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மனிஷா கொய்ராலா, பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்தார். மனிஷாவின் கண்களில் இருந்த வசீகரமும், அவரது நடிப்பும் … Read more

ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? இல்லையா?…அவரே சொன்ன செம தகவல்

மும்பை : தமிழில் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த டைரக்டர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஷாருக்கானை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான், நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் … Read more

பாடி ஷேமிங் பெண்களை ரொம்பவே பாதிக்குது.. டபுள் எக்ஸல் படத்தை தயாரித்து நடிக்கும் வலிமை நாயகி!

சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா வெயிட் ஏற்றியதை போலவே வலிமை நாயகி ஹூமா குரேஷி டபுள் எக்ஸல் படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார். ஏற்கனவே அவர் ஓவர் வெயிட் தானே என நெட்டிசன்கள் கிண்டல் செய்யும் அந்த பாடி ஷேமிங்கிற்கு எதிரான படமாகத்தான் டபுள் எக்ஸல் உருவாகி வருவதாக கூறி உள்ளார் ஹூமா குரேஷி. இந்த படம் வெளியான பிறகு மக்கள் மத்தியில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறார் அவர். யார் … Read more

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோக்கள்: விஜய்க்கும் சேர்த்து ரூல்ஸ் போட்ட இயக்குநர்

ஐதராபாத்: விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. வம்சி பைடிபல்லி இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘வாரிசு’ சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் கசிந்து வருவதால், இயக்குநர் புது ரூல்ஸை போட்டுள்ளார். பீஸ்ட் மோடில் இருந்து வாரிசு ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் நடித்த விஜய், தற்போது ‘வாரிசு’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் அமர்க்களமாக … Read more

Thiruchitrambalam Review: ரசிகர்களை திருப்திப்படுத்தினாரா தனுஷ்.. திருச்சிற்றம்பலம் விமர்சனம் இதோ!

Rating: 3.5/5 நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் இசை: அனிருத் இயக்கம்: மித்ரன் ஆர் ஜவகர் சென்னை: தெலுங்கு படங்களை ரீமேக் செய்து தமிழில் நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்த இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் இந்த முறை ஏகப்பட்ட தமிழ் ஃபீல் குட் மூவிக்களையே மிக்ஸ் செய்து திருச்சிற்றம்பலம் படத்தைக் கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா … Read more

ராஷ்மிகாவுடன் காதலா.. விஜய் தேவரகொண்டா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

ஐதராபாத் : விஜய் தேவரகொண்டா தெலுங்கு மட்டுமில்லாமல் தன்னுடைய படங்கள் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக தொடர்ந்து வலம் வருகிறார். இவருக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர். இவரது ஒவ்வொரு ஸ்டைலும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகின்றன. விஜய் தேவரகொண்டா அதிகமான படங்களில் நடித்துள்ள போதிலும் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் இவரது கேரியர் பெஸ்ட்டாக உள்ளன. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் … Read more

ஒன்றரை வருஷத்துக்கு பிறகு தியேட்டரில் தனுஷ் படம்.. திருச்சிற்றம்பலம் FDFSஐ தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. காலை முதலே தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் பட்டாசு வெடித்து, பாலபிஷேகம் செய்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கர்ணன் தான் கடைசி கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் நீண்ட … Read more

Thiruchitrambalam Twitter Review: தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா?

சென்னை: நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என்கிற கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். வெளிநாடுகளில் முன்பாகவே படம் வெளியான நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் தாறுமாறா? அல்லது தடுமாற்றமா? என்பது குறித்து இங்கே … Read more