புஷ்பா 2 படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி…இதுதான் காரணமா ?

சென்னை : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த படம் தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்த சூழலிலும் 450 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்த படம். ஆந்திராவின் சேஷாச்சலம் … Read more

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களை பார்க்கலாங்களா! வரிசையில சிறப்பான படங்கள் இருக்கு!

சென்னை : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தற்போது ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளிலும் சிறப்பான படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்தப் படங்கள் சில வாரங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்துவிட்டு ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. கனவுகளை தொடரும் ரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் படங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியாகி வருகின்றன. ரசிகர்களின் சிறப்பான என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டிரஸ் பஸ்டராக படங்கள் விளங்கிவரும் நிலையில், … Read more

சீதா ராமம், லால் சிங் சத்தா கலெக்‌ஷன் ரிப்போர்ட்: வசூல் ரேஸில் வேகமெடுக்கும் ‘விருமன்’

சென்னை: ஆகஸ்ட் 5ம் தேதி வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. Sita Ramam Movie Review | Yessa ? Bussa ?| Sita Ramam |Dulquer Salmaan|*Review அதேபோல் கடந்த வாரம் விருமன், லால் சிங் சத்தா, ரக்‌ஷா பந்தன் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளன என பார்க்கலாம். வசூல் மழையில் சீதா ராமம் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், … Read more

நான் எப்பவும் இந்தியன் தான்…இரட்டை குடியுரிமை சர்ச்சைக்கு முடிவு கட்டிய அக்ஷய்குமார்

மும்பை : 2022 ம் ஆண்டு பாலிவுட்டிற்கு மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பாரபட்சமின்றி யாருடைய படம் ரிலீசானாலும் ஃபிளாப் ஆகி, வசூலில் அடி மேல் அடி வாங்கி வருகின்றன. அதிலும் பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் படங்கள் அனைத்தும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் அனைத்து படங்களும் வரிசையாக தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அக்ஷய் குமார் நடித்த 3 படங்கள் ரிலீசாகி … Read more

தொடர்ந்து 5 படங்கள் பிளாப்…வேதனையில் பிரபுதேவா..பஹிரா படம் கைக்கொடுக்குமா?

சென்னை : பிரபு தேவா நடித்த ஐந்து திரைப்படங்களும் தொடர்ந்து பிளாப்பானதால் அவர் பஹிரா திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்திய சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடன கலைஞராகவும் நடன இயக்குநராகவும் தனக்கே உரித்தான தனி ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பிரபுதேவா. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் வெற்றிகரமான இயக்குநராகவும் நட்சத்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். பொய்க்கால் குதிரை இவர் நடிப்பில் சமீபத்தில் ஆகஸ்ட் 5ஆம் … Read more

”விக்ரம் ரோலக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு சூர்யாவிடம் கேட்ட முதல் கேள்வி”: கார்த்தி சுவாரஸ்யம்

சென்னை: கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு கார்த்தி பதிலளித்துள்ளார். அப்போது அவர், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் பாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். விருமனுக்கு கிடைத்த வரவேற்பு பருத்தி வீரனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கார்த்தி, அடுத்தடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’ என தரமான படங்களில் நடித்து, ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார். இறுதியாக அவர் நடிப்பில் ‘சுல்தான்’ படம் … Read more

வீட்டில் தேசிய கொடி…சர்ச்சையில் சிக்கிய சூரி..வறுத்து எடுக்கும் சமூக வலைத்தளம்!

சென்னை : நடிகர் சூரி தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சூரி சினிமா நடிகராகும் கனவுகளுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 1998-ல் வெளியான மறுமலர்ச்சி’ திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார். 2009-ல் சுசீந்திரன் இயக்குநராகவும் விஷ்ணு விஷால் நடிகராகவும் அறிமுகமான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் சூரிக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் 50 பரோட்டாக்களை அசால்ட்டாக சாப்பிட்டு … Read more

ரஜினியை ஏமாற்றிய முதல்வர் கருணாநிதி..அபூர்வ ராகங்கள் சுவாரஸ்யம்

சென்னை: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் திரை உலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 47 ஆண்டுகள் ஆகிறது. இன்றுவரை அவர்தான் திரையுலகின் டாப் ஸ்டாராக இருக்கிறார். அபூர்வ ராகங்கள் படம் மூலம் திரையுலகில் முதன்முதலில் கால்பதித்தார் ரஜினிகாந்த். சாதாரண சிறு வேடத்தில் வந்தவர் இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக 70 வயதிலும் நடித்து வருவது பிரமிக்கத்தக்க விஷயமே. வில்லன் வேடம் கிடைத்தால் போதும் ரஜினிகாந்தின் பெரிய லட்சியம் கர்நாடகாவில் ஒரு எளிய குடும்பத்தில் … Read more

75 ஆண்டுகால சுதந்திரம்.. சுதந்திரத்தை போற்றிய சிவகார்த்திகேயன்.. வீடியோ மெசேஜ்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் ரிலீசாகி வருகின்றன. அடுத்ததாக இவரது நடிப்பில் பிரின்ஸ் படம் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து கமல் தயாரிப்பிலும் சாய் பல்லவியுடன் இணைந்து அடுத்ததாக படத்தில் நடிக்கவுள்ளார். மாவீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது டாக்டர், டான் … Read more

இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : நடிகை வாணி போஜன் தன்னை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். விமானப் பணி பெண்ணான வாணி போஜன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பின் சன்தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனதிலும் இடம் பிடித்தார். சின்னத்திரை நயன்தாரா சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் ஓ … Read more