இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான வைஷ்ணவி தனது கணவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராகவும் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு சமூக கருத்துகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். பிக் பாஸ் சீசன் வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் … Read more

ஸ்பெயினில் இந்திய கொடியை பறக்க விட்ட நயன்தாரா-விக்கி.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

சென்னை : 75 வது சுதந்திர திருநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி, இந்திய கொடியை பறக்கவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது என்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க பலர் சுதந்திரக் கொடியை ஏற்றி வந்தனர். குடிமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் … Read more

அதெல்லாம் யுவன் பாத்துப்பான்… கேமரா மேனிடம் கூறிய செல்வராகவன்

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தின் கதையையும் எழுதியுள்ளாராம். தனுஷின் கர்ணன் படத்தை தயாரித்திருந்த தானுதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். புதுப்பேட்டை கூட்டணி படத்திற்காக மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்களோ என்னவோ. ஆனால் இந்தப் படத்தின் இசைக்காக மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். காரணம் இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு நல்ல … Read more

வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்!

சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் விருமன். படம் கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 30 கோடிகளுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் கார்த்தி நடிகர் கார்த்தி கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ள படங்கள் அனைத்தும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. பருத்தி வீரன், கொம்பன் என இந்த … Read more

மீண்டும் லீக்கான வாரிசு படத்தின் வீடியோ.. இந்தமுறை ஹாஸ்பிடல் சீன்.. அட ஸ்ட்ரெச்சர்ல யாரு சரத்குமாரா!

சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம் என நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து பிரபல இயக்குநர் வம்சி படிப்பள்ளியால் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் காட்சிகள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹிட் … Read more

அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என பெயர்ப் பெற்றவர் நடிகர் அர்ஜுன், இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘தீயவர் குலைகள் நடுங்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரில் ட்வீஸ்ட் வைத்துள்ளது படக்குழு. அறுபதை தொட்ட ஆக்சன் கிங் தமிழ் சினிமாவில் அதிகமான போலீஸ் திரைப்படங்களில் நடித்த ஹீரோக்களில் அர்ஜுனும் மிக … Read more

ஆசையை நேரடியாக சொன்ன விஜய் தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா லோகேஷ் கனகராஜ் !

சென்னை : லோகேஷ் கனகராஜியுடன் இணைய காத்திருப்பதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் எண்ணற்ற வேற்று மொழி படங்கள் நேரடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கில் உருவாகும் படங்கள் நேரடியாக அதே நாளில் உருவாகும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் வரும் 25ந் தேதி தமிழ் தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் தேவர்கொண்டா டோலிவுட்டில் மிக … Read more

தேசிய விருது மீது எனக்கிருந்த பார்வை சூர்யாவுக்கு கிடைத்தவுடன் மாறிவிட்டது – சுதீப்

சென்னை: திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளிலேயே இந்திய அளவில் பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுதான். ஒரு பக்கம் தேசிய விருது வாங்குவதை பெருமையாகவும் அதை பலமுறை வென்றவர்களை பெருமைக்குரியவராகவும் பார்ப்பது வழக்கம். சில சமயம் அந்த விருதின் மீது விமர்சனங்களும் விழும். சூரரைப் போற்று சென்ற ஆண்டு ஓடிடி-யில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், நடிகைக்கான விருது அபர்ணாவிற்கும் சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று … Read more

வாரத்திற்கு ஒன்னு…ரெட் ஜெயண்ட் மூவிஸ் காட்டில் அடைமழை காலம் போல

சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், 2008 ம் ஆண்டு முதல் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றை செய்து வருகிறது. இந்நிறுவனம் துவங்கிய 15 ஆண்டுகள் கடந்து விட்டதை சமீபத்தில் விழா எடுத்து கொண்டாடினர். டைரக்டர் தமிழ்வாணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்கும் நோக்கத்துடன் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் துவங்கப்பட்டது. ஆனால் அந்த படம் முடியாமல் போனதால் தங்களின் முதல் தயாரிப்பாக விஜய்யின் குருவி படத்தை தயாரித்தனர். சூர்யாவின் ஆதவன்,7 ம் … Read more

திருமணத்திற்கு முன் இளம் பெண்ணுடன் காரில்.. போலீசில் வசமா சிக்கிய நாகசைத்தன்யா!

ஆந்திரா: திருமணத்திற்கு முன் இளம் பெண் ஒருவருடன் காரில் இருந்த போது போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டதை நடிகர் நாகசைத்தன்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜூனின் மகனான நாகசைத்தன்யா தெலுங்கில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார். சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, … Read more