என் பெயரில் மோசடி நடக்குது.. யாரும் ஏமாந்துடாதீங்க.. ரசிகர்களை அலர்ட் செய்த சாக்ஷி அகர்வால்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் தனது பெயரில் பணமோசடி நடப்பதாகவும் யாரும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்றும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சாக்ஷி அகர்வால் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார். அவருக்கு சுமார் 2.1 மில்லியன் ஃபாலோயர்கள்