கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்.. தெரிந்து கொள்ள வேண்டியது?

பொதுவாக வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ ஒருவர் கடன் வாங்கியிருக்கும்போது இறந்து விட்டால் அடுத்து என்ன நடக்கும்? என்றேனும் யோசித்திருக்கீர்களா? குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை செலுத்தாவிடில், கடன் வாங்குபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வங்கிகளுக்கு உரிமை உண்டு. முதன்மை கடன் வாங்கியவர் திருப்பி செலுத்துவதற்கு முன்பு இறந்து விட்டால், அது உத்தரவாதம் அளித்தவர் அல்லது சட்டபூர்வ வாரிசிடம் இருந்து வங்கித் தொகையை மீட்க முடியும். யார் இந்த நஜீப் ரசாக்.. மலேசியாவை புரட்டி போட்ட நிதி … Read more

கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!

உலகம் முழுவதும் டெக் ஊழியர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையிலும், டெக் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் ஊழியர்கள் கூடுதலான பணத்தைச் சம்பாதிக்க ஓரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதுபோன்று பணியாற்ற உலகில் பல நிறுவனங்களில் அனுமதி அளிக்கும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறது. Moonlighting கொள்கைக்கு ஏற்கனவே விப்ரோ, இன்போசிஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது டிசிஎஸ்-ம் இணைந்துள்ளது. பெங்களூரு … Read more

ரூ.2140 கோடி நட்டமா? புதிய ஐபிஓ ஆவணங்களைத் தாக்கல் செய்த ஓயோ ரூம்ஸ்!

2022-2023 நிதியாண்டில் ஓயோ நிறுவனம் முதல் காலாண்டு 1,159.3 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளதாக செபிக்கு தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது. சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது ஓயோ நிறுவனத்தின் வருவாய் 3,962 கோடியிலிருந்து 4781.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு ஹோட்டல் துறை மீண்டு வருவதையே இது காட்டுகிறது. ரெசிஷனிலும் அசராத டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்குக் கொண்டாட்டம் தான்..! நட்டம் சென்ற ஆண்டு ஓயோ நிறுவனம் 4103 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்த … Read more

ரெசிஷனிலும் அசராத டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்குக் கொண்டாட்டம் தான்..!

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிததை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் உருவாகும் என்று பிட்ச், உலக வங்கி, ஐஎம்எப் ஆகியவை எச்சரித்துள்ளது. இந்த ரெசிஷன் 2008 போலவும், டெக் துறையில் ஏற்பட்ட Y2K பிரச்சனை போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்த்து இருக்கும் போது டெக் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் டிசிஎஸ் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு … Read more

ரெஷசன் வரப்போகிறது.. புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதை நிறுத்திய FedEx!

ஃபெட் எக்ஸ் (FedEx) ரெசசன் அச்சம் காரணமாகப் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதிலிருந்து பின்வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. லாஜிஸ்டிக் நிறுவனமான FedEx நிறுவனம் மெம்பிஸ், டென்னசை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் லாஜிஎஸ்டிக் ஆர்டர்கள் சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. கடைசியில் டிசிஎஸ்-ம் அறிவித்தது.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! இந்திய சிஇஓ அமெரிக்காவின் முன்னணி கொரியர் டெலிவரி சேவை நிறுவனமான FedEx நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக … Read more

தண்ணி காட்டும் ஐடி ஊழியர்கள்.. டிசிஎஸ் கதறல்..!

இந்திய ஐடி நிறுவனங்கள் ஒருபக்கம் ரெசிஷன் அச்சத்தால் என்ன செய்வது எனக் குழம்பியிருக்கும் வேளையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்கள் மத்தியில் முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கிய போது அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த டிசிஎஸ் நிறுவனம் தற்போது ஊழியர்களைத் திரும்பவும் அலுவலகத்திற்கு அழைக்க முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இதையும் தாண்டி முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு … Read more

6 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வார இறுதியில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று எப்படியிருக்குமோ? என்ற பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் இன்றும் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? தங்கம் விலை இன்னும் குறையுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? இன்று சர்வதேச சந்தையில் என்ன நிலவரம் என்ன? இந்திய … Read more

உலகிலேயே விலை உயர்ந்த பங்கு எது தெரியுமா..? ஒரு பங்கின் விலை 3.3 கோடி ரூபாய்..!

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே பங்கு தான் உலகின் மிக விலையுயர்ந்த பங்காக உள்ளது. பெர்க்ஷயர் ஹாத்வே கார்ப்பரேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மறுகாப்பீடு, பயன்பாடுகள், எரிசக்தி, சரக்கு ரயில் போக்குவரத்து, உற்பத்தி, சில்லறை வணிகம் மற்றும் சேவைகள் உட்படப் பல துறைகளில் பணியாற்றி வருகிறது. நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) பட்டியலிடப்பட்ட பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள் BRK.A மற்றும் BRK.B என்ற இரு பெயர்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. உலகின் 7வது பணக்காரருக்கு இன்று பிறந்த … Read more

மோடி அரசின் நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி-யில் இவ்வளவு இருக்கா..?

இந்தியா சீனாவுக்குப் போட்டியாக மிகப்பெரிய உற்பத்தி நாடாக மாறி வரும் நிலையில் ஏற்றுமதிக்கும், உற்பத்தி அடிப்படையிலான வளர்ச்சிக்கும் போக்குவரத்துக் கட்டமைப்பு மிகவும் முக்கியம், அதைவிட முக்கியமான மலிவான விலையில் போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியம். இந்த முக்கியமான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி-ஐ அறிமுகம் செய்துள்ளார். இப்புதிய நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி மூலம் என்ன நடக்கும்..? அமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இந்தியாவுக்கு எது பெஸ்ட்! நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி இந்திய அரசு பல … Read more

நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சிறந்த பென்னி பங்குகள்.. உங்கள் வசம் இருக்கா?

பென்னி பங்குகள் என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் பலருக்கும் தெரிந்திருக்கலாம். பொதுவாக பென்னி பங்குகள் பொதுவாக 10 ரூபாய்க்கு கீழாக அல்லது மிக குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளாகும். இதே அண்டை நாடுகளில் 5 டாலருக்கும் கீழாக வர்த்தகமாகும் பங்குகள் பென்னி பங்குகள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக இத்தகைய பங்குகள் மிக ரிஸ்கானது என கூறப்படுகின்றது. இது அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் பொருந்தாது. ஆக பென்னி பங்கினில் முதலீடு செய்வதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையுடன் … Read more