SBI வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. இனி ‘இந்த சேவை’க்கு கட்டணம் இல்லை..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான எஸ்எம்எஸ் கட்டணங்களைத் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. USSD (கட்டமைக்கப்படாத துணை சேவை தரவு) சேவைகளைப் பயன்படுத்தி இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இது பியூச்சர் போன்கள் வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்.. இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கு SBI பெயரில் வந்திருக்கா.. நம்பாதீங்க.. உஷாரா இருங்க! பியூச்சர் போன்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் … Read more

விளம்பரத்துக்கு மட்டும் 400 கோடி செலவு.. FIFA, T20 உலகக் கோப்பை டார்கெட்..!

இந்திய டெலிகாம் துறை புதிய உயரத்தை எட்ட இருக்கும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்குள் 5ஜி சேவையை யார் முதலில் அறிமுகம் செய்வது என்பதில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் புதிய 5ஜி சேவையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், விளம்பரப்படுத்தவும் பல புதிய முறைகளைக் கையாள முடிவு செய்துள்ளது டெலிகாம் நிறுவனங்கள். 4ஜி சேவையைப் போலவே யார் முதலில் 5ஜி சேவையில் முந்துகிறதோ அவர்கள் தான் அடுத்த 5 – 10 வருடத்திற்கு … Read more

நட்டத்தில் இயங்கி வரும் டாப் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. முதலீடுகள் என்ன தான் ஆகின்றன?

2022-ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்றன. ஆகஸ்ட் மாதம் மட்டும் 20 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்றுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 341 பில்லியன் டாலர். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எல்லாம் கோடி கணக்கில் முதல்லீடுகளை ஈர்ப்பது, அதனை தண்ணீர் போல செலவளிப்பது என இருக்கும் நிலையில், அவை கோடி கணக்கில் நட்டம் தான் அடைந்து வருகின்றன. இதுவரையில் ஒரு மாதம் கூட லாபம் என்பதையே பார்த்ததில்லை … Read more

இலங்கையின் திட்டம் பலிக்குமா.. ஐஎம்எஃப் ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்க ஏற்பாடு..எதற்காக?

இலங்கை அண்மை காலத்திலான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இலங்கையின் வெளி கடன் கொடுநர்களுக்கு அறிவிக்கப்படும் என உலகளாவிய சட்ட நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கமானது வரவிருக்கும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு? நிதி திரட்ட திட்டம் கடும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை, பல்வேறு … Read more

விளாடிமிர் புதின் மூலம் மோடி அரசுக்கு ரூ.35,000 கோடி லாபம்.. எப்படி தெரியுமா..?

உலகம் முழுவதும் இருக்கும் வல்லரசு நாடுகள் பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியா மட்டும் திறம்படச் சமாளித்து வருகிறது, இதற்கு முக்கியக் காரணம் விளாடிமிர் புதின் கொடுத்த ஆஃபர் தான். ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்கள் தட்டுப்பாடு எனப் பலவற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா … Read more

அதிகரிக்கும் ‘Ghost Jobs’.. கடுப்பாகும் ஊழியர்கள்..!

ரெசிஷன் எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பாவில் தான், இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என நினைக்கும் வேளையில் வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது அதிகப்படியான Ghost Jobs உருவாகியுள்ளது. உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் வேளையில் பெரிய நிறுவனங்கள் பொருளாதாரச் சரிவில் ஏற்படும் வர்த்தகச் சரிவை சமாளிக்க அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதேபோன்ற நிலை இந்தியாவிலும் உருவாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஒன்று தான் … Read more

ஓலா: 500 பேர் திடீர் பணிநீக்கம்.. ஆடிப்போன டெக் ஊழியர்கள்..!

இந்தியாவில் புதிய மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் ஒன்றாக விளங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் பெரிய முதலீட்டு உடன் களத்தில் இறங்கிய ஓலா தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஓலா நிறுவனம் ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை அளித்து வந்த நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்களைக் கைப்பற்றி எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியது. எல்லாம் சரியாகச் சென்று கொண்டு இருக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து மற்றும் … Read more

கிட்டதட்ட 6 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வார இறுதியில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று எப்படியிருக்குமோ? என்ற பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் இன்றும் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? தங்கம் விலை இன்னும் குறையுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? இன்று சர்வதேச சந்தையில் என்ன நிலவரம் என்ன? இந்திய … Read more

உஷாரா இருங்க..காளையா கரடியா மோதலில் இந்திய பங்கு சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் ?

தொடர்ந்து கடந்த வாரத்தின் இறுதியில் இருந்தே இந்திய பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், வாரத் தொடக்க நாளான இன்றும் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில், தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இந்த போக்கு இன்றும், இனி வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

ரூ.70 கோடிக்கு வீடா.. ரொம்ப காஸ்ட்லியா இருக்கே.. டிமார்ட் சிஇஒ அசத்தல்!

மும்பை: சமீபத்திய காலமாக மும்பையில் ரியல் எஸ்டேட் வணிகமானது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம். கொரோனாவின் வருகைக்கு பிறகு முடங்கியிருந்த ரியல் எஸ்டேட் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக விலை அதிகமான சொகுசு வீடுகள் விற்பனையானது கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மும்பையின் முக்கிய நகரங்களில் பிரபல பாலிவுட் நடிகர், நடிக்கைகள், தொழிலதிபர்கள் என பலரும் ரியல் எஸ்டேட்களில் (சொகுசு வீடுகளில்) முதலீடு செய்து வருகின்றனர். ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 … Read more