அடுத்தடுத்து சிக்சராக அடித்து தள்ளும் வேதாந்தா.. ஒடிசாவிலும் ரூ.25,000 கோடி முதலீடு!

மும்பை: தூத்துக்குடியில் இருந்து வெளியேறிய வேதாந்தா நிறுவனம் குஜராத் அரசுடன் இணைந்து, குஜராத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியில் ஈடுபடவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்தது. தற்போது ஓடிசாவில் புதியதாக 25,000 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே 80,000 கோடி ரூபாய் முதலீட்டினை கொண்டுள்ள வேதாந்தா, மீண்டும் அம்மாநிலத்தில் அலுமினியம் மற்றும் ஃபெரோக்ரோம் மற்றும் சுரங்க வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இந்த முதலீட்டினை அறிவித்துள்ளது. 1.54 லட்சம் கோடி … Read more

Ethereum மெர்ஜ் அப்டேட் வெற்றிகரமாக முடிந்தது.. ஏன் இது மிகவும் முக்கியமானது..!

கடந்த சில மாதங்களில் கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் நிறுவனங்கள், சேவை பெறுவோர், அளிப்போர் என அனைத்து தரப்பினரும் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். இதற்கு மிக முக்கியமான காரணம் கிரிப்டோகரன்சி விலை உயர்வோ அல்லது சரிவோ இல்லை. கிரிப்டோகரன்சி சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் கிரிப்டோ தளங்களில் ஒன்றான Ethereum க்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சாப்ட்வேர் அப்டேட் தான். இது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனா இருக்கு… மீண்டும் சரிவு … Read more

டாடா குழுமத்தின் 5 ஆண்டு திட்டம்.. மீண்டும் மகாராஜா-வாக மாறும் ஏர் இந்தியா..!

இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தை டாடா குழுமம் மீண்டும் மகாராஜா அந்தஸ்து-க்குக் கொண்டு வர முயற்சியில் தீவிரமாக உள்ளது. டாடா குழுமத்தின் நிர்வாகம் ஏற்கனவே ஏர் இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன் மூலம் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை மற்றும் விருப்பம் அதிகரித்து ஏர் இந்தியாவின் வர்த்தகமும் அதிகரித்து. இந்த நிலையில் தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்குக் கேம்பிள் வில்சன்-ஐ … Read more

அடல் பென்ஷன் யோஜனா: அக்டோபர் 1 முதல் புதிய மாற்றம்..!

இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரச் சமநிலையை நிலை நிறுத்துவது மிகவும் முக்கியமானது, அதேவேளையில் அவசியமானதும் கூட. யாராக இருந்தாலும், எவ்வளவு தொகையை முதலீடு செய்வதாக இருந்தாலும் திட்டத்தின் ஒவ்வொரு நன்மை தீமை பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வப்போது முதலீட்டு திட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தை பாருங்க. மாதம் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா.. LIC-யின் சாரல் … Read more

பட்ஜெட் குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த எஸ்பிஐ..!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அனைத்து கடன்களுக்குமான வட்டியை உயர்த்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி முடிவால் புதிதாகக் கடன் வாங்குபவர்கள் மட்டும் அல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதம் உயர உள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கூடுதலான வட்டியை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எவ்வளவு வட்டியை உயர்த்தியுள்ளது தெரியுமா..? QR Code மூலம் … Read more

சீனாவுக்கு இது போறாத காலம்.. 2020ஐ விட ரொம்ப மோசம்..!

சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் 3.5% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக 5.5% ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக பொருளாதாரம் மிக மோசமான வளர்ச்சிக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் சரிவு இந்தியாவுக்கு பலன் தரும்.. எப்படி தெரியுமா.. எஸ்பிஐ என்ன சொல்லியிருக்கு பாருங்க! பொருளாதாரம் சரிவு தொடர்ந்து நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவினைக் … Read more

விரைவில் ரெசிஷன்.. எச்சரிக்கும் பிட்ச்.. முதல் பாதிப்பு யாருக்கு..?!

உலகளவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய வங்கிகள் செய்வது அறியாமல் வெறும் வட்டி விகித உயர்வை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC அடுத்த சில வாரத்தில் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும் கூடுதல் வருமானத்தை ஈர்க்க வேண்டும் என்பதாகவும் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது மட்டும் நடந்தால் பணவீக்கம் மேலும் மோசமடையும். இந்த நிலையில் உலகின் முன்னணி ரேட்டிங் … Read more

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது எப்படி?

சில சமயங்களில் திடீரென வெளியூர் பயணம் செய்ய திட்டமிடும் போது பலர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வார்கள். டிக்கெட்டை முன்பதிவு செய்து இருந்தால் கண்டிப்பாக உட்கார்தோ அல்லது படுத்துக்கொண்டோ ரயிலில் பயணம் செய்யலாம். இல்லை என்றால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வாங்கி பயணம் செய்ய வேண்டும். ஆங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறி அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் முறையை ரயில்வேஸ் அறிமுகம் செய்துள்ளது. ரூ.8000 சம்பளத்துடன் ஆரம்பித்த நிகில் காமத் பயணம்.. … Read more

வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? வீட்டு உரிமையாளர்கள் நிலை என்ன..?

புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் ஒரு வீடு, அலுவலகம் என எந்தச் சொத்தை வாடகைக்கு எடுத்தாலும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும், இந்தப் புதிய வரி ஜூலை 18 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்புகளும், தொடர்ந்து செய்யப்பட்டு வரும் மாற்றங்களும் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் வீடு, அலுவலகத்திற்கான வாடகை பேமெண்ட்-ல் தற்போது … Read more

மோடி கலந்துகொள்ளும் SCO மாநாடு.. SCO அமைப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்..!

அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் குழுவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் நடக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா 2017 முதல் உறுப்பினராக உள்ளது. புவியியல் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகும். இந்த அமைப்பு யூரேசியாவின் பரப்பளவில் தோராயமாக 60%, உலக மக்கள் தொகையில் 40% மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் … Read more