1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..!

இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று வெளியிட்டார். இப்புதிய தொழிற்சாலை மூலம் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ்-ஐ பாதி விலையில் வாங்க முடியும் என்றும், இதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘எண்ணெய்’ என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ.200 கோடி மதிப்பிலான 7 ஸ்டார் ரிசார்ட் இடிப்பா? இன்னொரு நொய்டா … Read more

முழு நேர ஊழியர்கள் இது சரிவராது.. மூன் லைட்டிங்-க்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎம்!

சமீபத்திய காலமாகவே மூன்லைட்டிங் என்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஐடி நிறுவனங்கள் பலவும் இது குறித்து தங்கள் கருத்துகளை விவாதித்து வருகின்றன. முன்னதாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், மூன்லைட்டிங் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன. தற்போது சர்வதேச டெக் ஜாம்பவான் ஆன ஐபிஎம் நிறுவனமும் மூன் லைட்டிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. சீனா வேண்டாம்.. இந்தியாவை தேடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் – நிர்மலா சீதாராமன் ஐபிஎம் எச்சரிக்கை … Read more

லிப்ஸ்டிக் இன்டெக்ஸ்.. பொருளாதார சரிவின் ஆரம்பமா..?!

உலகம் முழுவதும் பணவீக்கம் உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை தான் முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத பணவீக்க உயர்வு சில முக்கிய உண்மைகளைக் கூறியுள்ளது. எரிபொருள் மட்டும் அல்லாமல் பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் விலை உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பல முறை வட்டி விகிதத்தை உயர்த்தியும் அதிகரித்து விலைவாசி அதிகரித்துப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது. இப்படியிருக்கையில் தான் லிப்ஸ்டிக் இன்டெக்ஸ் திரும்பியுள்ளது. முழு நேர ஊழியர்கள் இது சரிவராது.. மூன் … Read more

36 போலி நிறுவனங்கள்.. ரூ.132 கோடி ஜிஎஸ்டி மோசடி.. முக்கிய குற்றவாளி கைது!

மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் 36 போலி நிறுவனங்களை உருவாக்கி 132 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்று கூறப்படும் ஜிஎஸ்டி கடந்த சில ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மும்பையில் 132 கோடி மதிப்புள்ள போலி விலைப்பட்டியல் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.23 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இனி … Read more

டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு சிவப்பு கொடி.. விப்ரோவுக்கு பச்சை கொடி.. கோல்ட் மேன் அதிரடி!

சமீப காலமாகவே சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி துறையானது பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் மதிப்பினை ” Sell ” என டவுன் கிரேட் செய்துள்ளது. நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி நிறுவனங்களின் வருவாய் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய … Read more

ஓரே நாளில் ரூ.740000 கோடி இழப்பு.. அமெரிக்க பணக்காரர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் கணிக்கப்பட்டதைத் தாண்டி 8.3 சதவீதமாகப் பதிவான நிலையில் பெடரல் வங்கி மீண்டும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது. வட்டி விகிதம் உயர்த்துவதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மந்த நிலை உருவாகும், நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு அதிக வட்டியை செலுத்த வேண்டும், இதனால் லாபம் குறையும் இப்படிப் பல விஷயங்கள் இருக்கும் காரணத்தால் பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் … Read more

இனி தேவையில்லை.. இளவரசர் சார்லஸ்-க்கு சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்.. !

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார். இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் கணக்கான கிளாரன்ஸ் ஹவுஸ் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக … Read more

முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக ஏற்றம்.. எப்படி தெரியுமா?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மூன்றாவது பெரிய கடன் வழங்குனராக உள்ளது. இதன் சந்தை மதிப்பானது முதன் முறையாக 5 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 22% ஏற்றம் கண்ட பிறகு இந்த அளவுக்கு சந்தை மதிப்பானது ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.3% ஏற்றம் கண்டு, 564.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த 5 அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த கால கட்டத்தில் மட்டும் … Read more

இரவிலும் இனி ஹோம் டெலிவரி.. சென்னை, பெங்களுருக்கு வரும் புதிய சேவை..!

இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல புதிய சேவைகளைக் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் NIGHT LIFE குறித்த விவாதம் தற்போது பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதால் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவில் முதல் நிறுவனமாக ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் சேவையின் டெலிவரி நேரத்தை விடியகாலை வரை நீட்டித்துள்ளது. இது முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படும் நிலையில் விரைவில் பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய … Read more

ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் வைரல்

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பல சுவராசியமான கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இளம் திறமையாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்வதில் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சில சுவாரசியமான அதே நேரத்தில் சில நகைச்சுவையான வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் திருமண மண்டபத்தில் நடந்த சண்டை ஒன்றின் வீடியோவை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். … Read more