இனி இந்தியாவில் டோல்கேட் இருக்காது.. அதற்கு பதிலாக என்ன? மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவின் பல இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்ததே. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் எதிர்காலத்தில் சுங்கச்சாவடி இருக்காது என்றும் அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க … Read more

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

மும்பை பங்குச்சந்தை தடுமாறினாலும் தொடர் வளர்ச்சி பாதையில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியான அமெரிக்கா பணவீக்க தரவுகள் மும்பை பங்குச்சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் கணிப்புகளை விடவும் அதிகமான பணவீக்க அளவீடுகளைப் பதிவு செய்த காரணத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. பாபா … Read more

இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்குவது எப்படி?

இந்தியாவில் பலரது கனவு தனது சொந்த உழைப்பில் ஒரு வீடு வாங்க என்பதாக இருக்கும். ஆனால் அதில் உள்ள சிக்கல்கள் பலரை சோர்வடையச் செய்துவிடும். முதல் முறையாக வாங்குபவர்களுக்கு. இடத்தை இறுதி செய்வது முதல் பட்ஜெட்டை நிர்வகித்தல் மற்றும் பிற சட்டப்பூர்வங்களை நிர்வகிப்பது வரை, கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்களும் உங்கள் கனவின் வீட்டைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். வீடு வாங்கும் போது நீங்கள் … Read more

சீனா வேண்டாம்.. இந்தியாவை தேடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் – நிர்மலா சீதாராமன்

சீனாவின் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தங்களது இருப்பினை மெதுவாக சீனாவில் குறைக்க தொடங்கியுள்ளன. கொரோனாவின் வருகைக்கு பிறகு சீனா கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி, சீனாவின் பல கடுமையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதன் காரணமாக சீனாவின் தங்களது உற்பத்தி செய்து பல கார்ப்பரேட்களும் தங்களது இருப்பிற்கு மாற்றாக, இந்தியா, வியட்நாம் என பல நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது. நிர்மலா … Read more

எலன் மஸ்க் போட்டியாக அம்பானி.. சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைக்கு அனுமதி பெற்ற ஜியோ!

சாட்டிலைட் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையை வழங்குதற்கான தொலைத்தொடர்புத் துறை அனுமதியை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சாட்டிலைட் கம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை இதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றதாக பிடிஐ தெரிவித்துள்ளது. மேலும் சாட்டிலைட் மூலம் உலகம் முழுவதும் தனிப்பட்ட மொபைல் நெட்வொர்க் சேவையை வழங்கவும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி உள்ளது. உலகை 27 முறை சுற்றி வரலாம்.. 11,00,000 கிமீல் ஜியோ பைபர்நெட்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு! சாட்டிலைட் தொலைத்தொடர்பு சேவை உரிமம் ஜியோவுக்கு … Read more

பலத்த சரிவுக்கு பிறகு தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. இன்றும் குறையுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்விலேயே 1% மேலாக சர்வதேச சந்தையில் சரிந்த நிலையில், இன்றும் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பணவீக்க தரவினை அடுத்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் … Read more

ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை.. ஊழியர்களை எச்சரிக்கும் இன்போசிஸ்!

ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை.. ஊழியர்களை எச்சரிக்கும் இன்போசிஸ்! ஐடி நிறுவனங்கள் பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என இரண்டு வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. சில வாரங்களுக்கு முன்பு இரண்டு இடங்களில் வேலை செய்வது ஒரு தெளிவான ஏமாற்று வேலை என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனமும் தங்களது ஊழியர்கள் நடத்தை விதிப்படி மூன் லைட்டிங் (moonlighting) என அழைக்கப்படும் இரண்டு வேலையைச் செய்ய அனுமதி கிடையாது என … Read more

எலான் மஸ்க் இடத்தை கைப்பற்றப்போகும் முகேஷ் அம்பானி..!

உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராண்ட்பேன்ட் சேவை மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போர் காலத்தில் எலான் மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் சேவை பெரிய அளவில் உதவியது. இதே ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அளிக்க வேண்டும் என ஆர்வமாக வந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தடுத்துத் தடைகள் மூலம் தற்போது மொத்தமாக வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இதே சேவையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அளிக்க உள்ளது. குஜராத் … Read more

அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கை.. நிறுவனங்களின் கலங்க வைக்கும் அறிவிப்புகள்.. உஷாரா இருங்க!

கோல்டுமேன் சாக்ஸ் குழும நிறுவனம் அதன் வருடாந்திர நடவடிக்கையினை, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் நிறுவனமான இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அதன் ஊழியர்களில் 1 – 5% வரை குறைக்கப்படுவது வழக்கமாக வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கலாம் … Read more

குஜராத்-க்கு ஜாக்பாட்.. 1000 ஏக்கர் நிலம், 20 பில்லியன் டாலர் முதலீடு.. பிரம்மாண்ட தொழிற்சாலை!

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கப்படும் வருகிறது. உலகம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சிப் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதேவேளையில் இந்தியாவில் இதுவரையில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையும், அதற்கான தொழில்நுட்பம் இல்லாத நிலையில் இந்தியாவில் புதிய துறையில் இதுவரையில் தொடாமல் இருந்து மத்திய அரச உணர்ந்தது. இதற்கு ஏற்ற வகையில் லாக்டவுன் காலத்தில் சிப் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உற்பத்தியையும் … Read more