இந்தியாவில் அவ்வளவுதானா.. டெஸ்லாவில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள்.. ஏன்?

உலகின் பல நாடுகளிலும் பணி நீக்கம் என்ற பதற்றமானது பல துறையினர் மத்தியில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக டெக் ஊழியர்கள் மத்தியில் இந்த பதற்றமானது அதிகமாகவே காணப்படுகின்றது. ஆனால் டெஸ்லாவின் நிலையே வேறு. இந்தியாவில் அதன் வணிகம் நிச்சயமற்ற நிலை இருப்பதால், தொடர்ந்து பல நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே தனது வணிகத்தினை இந்தியாவில் தொடங்க ஆர்வம் … Read more

HCL-ல் 350 பேர் பணிநீக்கமா.. பதற்றத்தில் ஐடி ஊழியர்கள்.. இன்னும் என்னவாகுமோ?

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னால்ஜி, மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளராக இருந்து வருகின்றது. இந்த சாப்ட்வேர் நிறுவனம் அதன் வாடிக்கையாளரான மைக்ரோசாப்ட்டின் திட்டத்தின் பணிபுரியும் ஊழியர்களில், 350 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக மணிக் கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியியில், ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்களது செலவு குறைப்பு நடவடிக்கையினை தீவிரமாக எடுத்து வருகின்றன. ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், … Read more

இந்திய பங்கு சந்தையின் தலையெழுத்து இன்று எப்படியிருக்கும்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை கடந்து காணப்படுகின்றது. சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து, 60,115 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து, 17,936 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக புல்லிஷ் கேண்டில் உருவாகியுள்ளது. ஆக இன்று மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சென்செக்ஸ், நிஃப்டி எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. … Read more

தடுமாறி வரும் தங்கம் விலை.. இனி குறையுமா.. மீண்டும் அதிகரிக்குமா?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்பட்டாலும், அது பெரியளவில் சரிவினைக் காணவில்லை. இது டாலரின் மதிப்பு தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்க தரவினையொட்டி, எப்படி வருமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் … Read more

உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% அதிகரிப்பு!

உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. பணவீக்கம் உயர்வு மத்திய வங்கிக்கு பெரும் தலைவலியாகத் தான் இருக்கும். அதை சரி செய்ய முன்பு எல்லாம் வட்டி விகிதம் குறைக்கப்படும். ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கடந்த 2 நாணய கொள்கை அமர்வில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் … Read more

பிரபல தண்ணீர் நிறுவன பங்குகளை வாங்கும் டாடா குழுமம்.. என்ன விலை தெரியுமா?

இந்தியாவின் மிகப் பெரிய தண்ணீர் பாட்டில் நிறுவனமான பிஸ்லரி பங்குகளை டாடா குழுமம் வாங்க உள்ளதாக செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. பிஸ்லரி நிறுவனத்துக்கு இணையாக டாடா குழுமம் பங்குகளை வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பரிவர்த்தனை நடைபெற்றால் டாடா குழுமத்திற்கு தண்ணீர் வர்த்தகத்தில் மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பிஸ்லெரி இண்டர்நேஷனல் பங்குகள்.. டாடா குழுமம் எடுத்த அதிரடி முடிவு! டாடா காப்பர்+ டாடா குழுமம் ஏற்கனவே டாடா கப்பார்+ … Read more

வரலாறு காணாத பாகிஸ்தான் பெருவெள்ளம்.. $30 பில்லியன் இழப்பு ஏற்படலாம்..!

டெல்லி: பாகிஸ்தானில் அதீத மழைப் பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த கடும் வெள்ளத்தால் 1396 பேர் இறந்துள்ளதாகவும், இதில் குறிப்பாக 499 குழந்தைகளும் அடங்குவர் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தென் மாகாணமான சிந்துவில் சராசரி மழையை விட 466% அதிக மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முமுவதுமே 30 ஆண்டு சராசரி மழையை விட 190% … Read more

போட்டியை சமாளிக்க வேற லெவல் நடவடிக்கை.. ஏர் இந்தியாவின் அதிரடி திட்டம்!

இந்தியா விமான நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும் நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய விமானங்களை இறக்கி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கிய டாடா நிறுவனம் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்காக 25 ஏர் பஸ்கள் மற்றும் 5 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களின் போட்டியை ஏர் இந்தியா சமாளிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. உலகக்கோப்பை … Read more

WFH or WFO.. அலுவலகம் வர சொல்லலாமா.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களின் முடிவு?

கடந்த வாரத்தில் பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழையால் இந்தியாவின் சிலிக்கான் வேலியே ஸ்தம்பித்து போயுள்ளது எனலாம். இதனால் பெங்களூரில் அமைந்துள்ள ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் பெரும் சவால்களை எதிர்கொண்ட நிலையில், பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுக்கு தெரிவித்துள்ளன. மேலும் தங்களது இழப்பினை ஈடுகட்ட நிவாரணம் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்திலேயே ஐடி நிறுவனங்கள் 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தன. … Read more

பிரம்மாஸ்திராவின் வசூல் சாதனை.. பிவிஆர், ஐநாக்ஸ் பங்கு விலை கிடு கிடு ஏற்றம்..!

ரன்பீர் கபூர் நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியானது. அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள இந்த படத்தில், ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 400 கோடி ரூபாய்க்கு மேலான செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில், 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலியா பட்: படத்தில் சம்பாதிப்பது எல்லாம் தூசு.. பிசினஸில் கோடிக்கணக்கில் … Read more