மத்திய அரசின் இ-பாஸ்போர்ட்: என்ன ஸ்பெஷல்..? என்ன நன்மை..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..?!

உலக நாடுகளில் பாஸ்போர்ட் என்பது பொதுவாகப் பேப்பர் வடிவத்தில் தான் உள்ளது, இதன் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கப் பல புதுமைகள் ஒவ்வொரு நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த இ-பாஸ்போர்ட் விநியோகம் மூலம் பாதுகாப்பு தன்மையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் போலி பாஸ்போர்ட்களை முழுமையாகத் தடுக்க முடியும். இ-பாஸ்போர்ட் என்றால்..? முழுக்க முழுக்க டிஜிட்டல் பாஸ்போர்ட் தான் இந்த இ-பாஸ்போர்ட்-ஆ..? இ-பாஸ்போர்ட் எப்படி இயங்கும்..? உலகிலேயே சக்தி … Read more

ரஷ்யாவுக்கு விழுந்த அடுத்தடுத்த அடிகள்.. புதின் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையாக ஒரு மாதத்தினை கடந்தும் நீட்டித்துக் கொண்டுள்ளது. இப்போரினால் உக்ரைனின் பொருளாதாரம் 45.1% மும், ரஷ்யாவின் பொருளாதாரம் 11.2%மும் சரியலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது. எனினும் இவ்விரு நாடுகளும் இன்று வரையிலும் தாக்குதலை நிறுத்திய பாடாக இல்லை. பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளையும், கண்டனங்களையும் விதித்தாலும், ரஷ்யா அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மாறாக தனது பொருளாதாரத்தினை எப்படி மீட்பது என்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது. … Read more

அசத்தும் வெராண்டா ஐபிஓ.. 14.6% ப்ரிமியம் விலையில் பட்டியல்.. விற்க வேண்டுமா..?

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் கடந்த வாரம் ஐபிஓ வெளியிட்ட நிலையில், இந்நிறுவன பங்குகள், ஏப்ரல் 11 திங்கட்கிழமை இன்று பங்குச்சந்தைகளில் வலுவான நிலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. ஐபிஓ-வில் சிறப்பான முதலீட்டை பெற்ற வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் இன்றும் மும்பை பங்குச்சந்தையில் சுமார் 14.60 சதவீதம் பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. 3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்! ஐபிஓ விலை 137 ரூபாயாக இருந்த நிலையில் எதிராகப் பிஎஸ்இ-யில் … Read more

சாமானியர்கள் கவலை.. தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. விலை குறையுமா.. வாய்ப்பிருக்கா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா? சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? … Read more

சென்னை-யில் ஐபோன்13 உற்பத்தியை துவங்கிய ஆப்பிள்.. விலை குறையுமா..?!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியாவிற்கும் மாற்றிய நிலையில், பல மாடல் போன்களைத் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுநாள் வரையில் பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை மட்டுமே இந்தியாவில் தயாரித்து வந்த ஆப்பிள், தற்போது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் லேடெஸ்ட் மாடலான ஐபோன் 13 சீரியஸ் போன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது. ஐபோன் உற்பத்தி நிறுத்தம்.. ஆப்பிள் முடிவால் முதலீட்டாளர்கள் … Read more

முதல் நாளே ஏமாற்றம் தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது. இந்த வாரத்தில் பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கும் நிலையில், அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. அன்னிய முதலீடுகள் கடந்த ஏப்ரல் 8 … Read more

300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. டிசிஎஸ் காலாண்டு முடிவுகள்..!

அமெரிக்கா பணவீக்க தரவுகள், ஐரோப்பிய நாடுகளின் நாணய கொள்கை கூட்டம் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மொத்தமும் சரிவுடன் திங்கட்கிழமை வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகிறது. Apr 11, 2022 10:29 AM வெரான்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் பங்குகள் NSE, BSE-யில் பட்டியலிடப்பட்டது Apr 11, 2022 10:28 … Read more

சிமெண்ட் விலை மீண்டும் உயரும்.. இதுதான் காரணம்..!

இந்தியாவில் அனைத்து நுகர்வோர் மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் உலோகங்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமான துறையைப் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல லட்சம் கட்டுமான திட்டங்கள் மந்தமாவது மட்டும் அல்லாமல், இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எண்ணிக்கை குறையலாம். அமெரிக்காவை மிரட்டும் ரெசிஷன்.. பேங்க் ஆஃப் அமெரிக்கா எச்சரிக்கை..! சிமென்ட் விலை இந்தியாவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டுமான … Read more

அமெரிக்காவை மிரட்டும் ரெசிஷன்.. பேங்க் ஆஃப் அமெரிக்கா எச்சரிக்கை..!

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுக்குப் பின்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்குப் பின்பு பணவீக்கம், விலைவாசி உயர்வால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு மூலம் அமெரிக்க அரசு சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டும் அல்லாமல் மாற்று வழியை அவசர அவசரமாகத் தேட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து.. வரி வழக்கில் … Read more

இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து.. வரி வழக்கில் சிக்கிய அக்ஷதா மூர்த்தி..!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை வெடித்த நாளில் இருந்து பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் முக்கியமான பிரச்சனையைத் தனது மனைவி மூலம் எதிர்கொண்டு வருகிறார். ஏற்கனவே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் அந்நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு இணையாக வளரும் ஓசூர்.. பன்னாட்டு நிறுவனங்களின் டார்கெட்-ஆக என்ன காரணம்..?! அக்ஷதா மூர்த்தி இந்த … Read more