டிஜிட்டல் பணத்தை உருவாக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்.. பெரிய நிறுவனங்களின் ஆட்டம் ஆரம்பம்..!

உலக நாடுகளின் நிதியியல் சந்தை இனி வரும் காலத்தில் கிரிப்டோகரன்சி, பிளாக்செயின், NFT வாயிலாகத் தான் இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக், அந்நாட்டு நாணயங்களை அச்சிடும் ராயல் மின்ட் அமைப்பைக் கோடைக் காலத்திற்குள் NFT உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட்டார். இது உலகம் முழுவதும் பேசப்பட்ட நிலையில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியுள்ளது. இதில் முக்கியமாகப் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா -வின் … Read more

இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வு..!

கொரோனா தொற்றில் இருந்து தட்டுத்தடுமாறி மெல்ல மெல்ல இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மீண்டு வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பணவீக்கத்தின் உயர்வால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் தொடர்ந்து 110 டாலருக்கு மேல் இருக்கும் காரணத்தால் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மோசமான நிலைக்குத் … Read more

விளாடிமிர் புதின் மகள்கள் மீது அமெரிக்கா தடை விதிக்க என்ன காரணம்..?!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் குற்றங்களைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்கா புதிய தடை உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவில் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் இரண்டு மகள்களான மரியா புடினா (வொரொன்ட்சோவா) மற்றும் கேடரினா டிகோனோவா ஆகியோரைக் குறிவைத்து அமெரிக்கா தடை உத்தரவை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏதற்காக விளாடிமிர் புதினின் மகள்கள் மீது தடை உத்தரவை வெளியிட வேண்டும்…? … Read more

புதின் மகள்கள் மீது புதிய தடை விதித்த அமெரிக்கா.. என்ன காரணம்..?

உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா – அமெரிக்கா மத்தியில் கடுமையான வர்த்தகப் பாதிப்புகளும், தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தற்போது புதின் வாரிசுகள் மீதும், ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகள் மீதும் புதிதாகத் தடை விதித்துள்ளது. உக்ரைன் மக்கள் உயிரிழப்பு உக்ரைன் மீதான போரின் மூலம் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றதை கண்டித்துத் தற்போது அமெரிக்கா மற்றும் … Read more

தங்கம் விலை 4வது நாளாக கொடுத்த சர்பிரைஸ்.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் 4வது நாளாக சரிவில் தான் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? மீடியம் டெர்மில் வாங்காலாமா? வேண்டாமா? இது மீண்டும் முதலீட்டாளர்களுக்கும் … Read more

ரஷ்யாவுக்கு அடுத்த செக்.. புதிய தடையை விதிக்க திட்டமிடும் அமெரிக்கா.. !

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளும் இணைந்து, ரஷ்யாவின் மீது புதியதாக மற்றொரு தடையை விதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் நிலையில், ரஷ்யா மிக மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்கு பல ஆயிரம் பேர் போரினால் … Read more

விஜய் சேகர் ஷர்மாவின் கருத்து எடுபடுமா.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் அதிகரிக்குமா?

பேடிஎம் பங்கு, முதலீட்டாளர்களின் பணத்தில் பெரும்பகுதியை அழித்த பங்குகளில் ஒன்று. இந்த பங்கினில் போட்ட பணமாவது மிஞ்சுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா, அதன் முதலீட்டாளார்களுக்கு பேடிஎம் நிறுவனத்தினை, வெற்றிகரமான மற்றும் லாபகரமான நிறுவனத்தை உருவாக்குவேன் என உறுதியளித்துள்ளார். பேடிஎம் கேஷ்பேக்கினால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.. சேவையால் அல்ல.. ஆதித்யா பூரி நறுக் கேள்வி! காத்திருக்கலாம் எனினும் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் … Read more

போர்டு உடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை.. எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, ஏற்றுமதிக்கு புதிய திட்டம்..!

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு மோட்டார்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வர்த்தகம் குறைந்த காரணத்தாலும், அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் சென்னை மற்றும் குஜராத்தில் இருக்கும் இரு தொழிற்சாலைகளைப் படிப்படியாக உற்பத்தியைக் குறைத்து விட்டு தொழிற்சாலைகளை மொத்தமாகத் மூட திட்டமிட்டது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை இருந்தது, இந்த நிலையைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு போர்டு மோட்டார்ஸ் சென்னை தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டில் போர்டு நிறுவனத்திற்கு இருக்கும் சப்ளையர்கள் … Read more

பிளிப்கார்ட்-ன் புதிய சேவை.. டாடா, ஜியோவுக்கும் நெருக்கடி.!

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் பார்மா துறையில் இறங்கியுள்ளது பிளிப்கார்ட். ஏற்கனவே இத்துறையில் பல முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ள நிலையில், சிறு நிறுவனங்கள் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ளக் கூட்டணி நிறுவனங்களாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான ஆன்லைன் வாடிக்கையாளர்களைக் கொண்ட பிளிப்கார்ட் களத்தில் இறங்கியுள்ளது மூலம் போட்டி கடுமையாகியுள்ளது. இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. … Read more

14 ரஷ்ய ஆடம்பர கப்பல்களை தொக்கா தூக்கிய நெதர்லாந்து..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது தடை விதித்த பல நாடுகளில் நெதர்லாந்து-ம் ஒன்று. ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் முக்கிய வர்த்தகப் பகுதிகளாக இருக்கும் நிலையில் பல நாடுகளில் வீட்டு, கார், கப்பல், முதலீடு, நிறுவனங்கள் எனப் பல சொத்துகளை வைத்துள்ளனர். போர் மூலம் விதித்த தடையைப் பயன்படுத்திப் பல நாடுகள் தத்தம் நாடுகளில் இருக்கும் ரஷ்ய மக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் நெதர்லாந்து … Read more