டிசிஎஸ் ஆதிக்கத்தை உடைக்க போகும் ஹெச்டிஎப்சி.. அடுத்தது ரிலையன்ஸ் தான்..!

இந்தியாவின் முன்னணி வீட்டுக்கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி, திங்கட்கிழமை தனது நிர்வாகக் குழு பல வருட ஆலோசனைக்குப் பின்பு ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளித்தது. இந்த முடிவைப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப் பல காரணங்கள் உண்டு. இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! குறிப்பாக ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு மூலம் சந்தையின் டாப் 10 நிறுவன பட்டியலில் மிக முக்கியமான மாற்றங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி … Read more

ஹெச்டிஎஃப்சி – ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு..!

ஹெச்டிஎஃப்சி குழும நிறுவனங்களை இணைக்க இயக்குனர் குழு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக ஹெச்டிஎஃப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச்டிஎஃப்சியுடன் இணைக்கப்படும். இதனை தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி-யின் இந்த அறிவிப்புக்கு மத்தியிலேயே நேற்று இந்த வங்கி பங்கின் விலையானது கணிசமான அதிகரித்திருந்தது. முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க? எனினும் இன்று ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலையானது 2% குறைந்து, 1624.10 … Read more

இண்டிகோ இணை நிறுவனரின் நெகிழ வைக்கும் மனசு.. படித்த கல்லூரிக்கு ரூ. 100 கோடி நன்கொடை..!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகேஷ் கங்வால், தான் படித்த கல்லூரிக்கு 100 கோடி ரூபாய் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார். ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான ராகேஷ் கங்வால், அங்கு இயங்கி வரும் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவினை மேம்படுத்த, இந்த மாபெரும் நன்கொடையினை வழங்கியுள்ளார். ஐஐடி கான்பூர் கடந்த ஆண்டே மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப பிரிவினை தொடங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் … Read more

பிஜேபி-க்கு நன்கொடையை அள்ளிக்கொடுத்த கார்ப்ரேட் நிறுவனங்கள்..!

இந்தியாவில் இருக்கும் முன்னணி 5 தேசிய கட்சிகளுக்கும் கார்ப்ரேட் மற்றும் வர்த்தக அமைப்புகள் 2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 921.95 கோடி ரூபாய் அளவிலான நன்கொடை அளிக்கப்பட்டு உள்ளதாக ADR அமைப்பு தனது ஆய்வில் குறிப்பிட்டு உள்ளது. இந்த 921.95 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையில் 91 சதவீத பணத்தை யார் கொடுத்தார்கள் என்பதற்கான விபரம் உள்ளது. மீதமுள்ள 9 சதவீத தொகைக்கான நன்கொடையாளர்களின் விபரம் இல்லை. 5 முன்னணி தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ஐரோப்பாவின் அடுத்த அதிரடி திட்டம்..!

ரஷ்ய படைகள் பின் வாங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு காயங்களுடன் பலரின் உடல்கள் கிடப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரஷ்ய படைகள் அவர்களை சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றசாட்டினை மறுத்துள்ள ரஷ்யா இது குறித்தான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு … Read more

100 ரூபாயை நெருங்கிய டீசல் விலை.. 13 நாளில் 9.20 ரூபாய் உயர்வு..!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்து வரும் காரணத்தால் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த துவங்கியுள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் விலையைக் கட்டாயம் உயர்த்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. பெட்ரோலை தொடர்ந்து ரூ100ஐ கடந்தது டீசல் விலை… அதிருப்தியில் வாகன ஓட்டிகள்! இதனால் மக்கள் அதிகப் பணத்தைக் கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, இந்த நிலையில் கடந்த 15 … Read more

தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு குறைந்திருக்கு?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் என்ன நிலவரம்?ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? மீடியம் டெர்மில் வாங்காலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். முதல் நாளே சர்பிரைஸ் தான்.. தங்கம் விலை குறைந்திருக்கு..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா? தடுமாற்றத்தில் தங்கம் விலை சர்வதேச … Read more

தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய யெஸ் வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ்..!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தினை தரும் விதமாக சற்று சரிவில் காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்ட நிலையில், இன்று முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 1100 … Read more

பிர்லாசாப்ட் பங்கின் விலை 20% அதிகரிக்கலாம்.. தரகு நிறுவனம் செம கணிப்பு.. வாங்கியிருக்கீங்களா?

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும் வழக்கம்போல ஒரு துறையானது செயல்பட்டு கொண்டிருந்தது என்றால் அதில் ஐடி துறையும் ஒன்று. ஏனெனில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில், தங்களுக்கு தேவையான பலவற்றையும் டிஜிட்டல் சேவை மூலமாகவே பெற விரும்பினர். இது ஐடி துறையில் வழக்கத்திற்கு மாறாக தேவையை ஊக்குவித்தது. சொல்லப்போனால் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்தது. தற்போது கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தாலும், கொரோனா போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் அது கைகொடுக்கும் என … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கடன் நிலுவை எவ்வளவு தெரியுமா..?!

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்த போது அந்நாட்டு மக்கள் அண்டை நாட்டுக்கு ஓடிக்கொண்டு இருந்த நிலையில், பல கனவுகள் உடன் உக்ரைனுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதுங்கியிருந்தனர். இந்திய அரசு ரஷ்யா, உக்ரைன் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இந்தியா அழைத்து வரப்பட்ட உக்ரைன் மாணவர்களின் கடன் நிலுவை பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை … Read more