தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளது எனலாம். அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது. இது சமீபத்திய உச்சமான 55,558 ரூபாயில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 3,600 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. ரூ.4800 … Read more

230 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அமெரிக்க சந்தை சரிவு..!

2022-23ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளின் சரிவின் காரணமாக மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை துவங்கினாலும், 250 புள்ளிகள் வரையில் உயர துவங்கியுள்ளது. இந்த உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் முதலீட்டுச் சந்தையில் நிலைமை மாறியுள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் முதல் உணவுப் பொருட்களின் விநியோகம் சீராகியுள்ளது. காலாண்டு முடிவுகள் காரணமாக அமெரிக்கச் சந்தை நேற்று சரிவுடன் … Read more

தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. வார இறுதி வர்த்தக நாளில் என்னவாகும.. கவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்த ஏற்றம் இனியும் தொடருமா? அல்லது மீண்டும் சரிவினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். இன்று தொடக்கத்திலேயே சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று சரிவில் தொடங்கிய நிலையில், தற்போதும் பெரியளவிலான … Read more

சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன.. இதனால் என்ன பயன்.. யாரெல்லாம் தொடங்கலாம்..!

கடந்த சில காலாண்டுகளாகவே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. மக்கள் பெரும்பாலும் மருத்துவ கட்டணங்களை செலுத்த இன்சூரன்ஸ் திட்டங்களையே நம்பியுள்ளனர். ஆனால் தற்போது சுகாதார சேமிப்பு கணக்குகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனலாம். உண்மையில் சுகாதார சேமிப்பு கணக்குகள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! பலரும் இந்த மருத்துவ செலவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களே சரியான ஆப்சனாக … Read more

3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

மார்ச் 31 ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அக்டோபர்-டிசம்பர் 2021 காலகட்டத்தில் மட்டும் சுமார் 11.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த கடன் இந்த டிசம்பர் காலாண்டின் முடிவில் 614.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இதேவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் வெளிநாட்டுக் கடன் அளவு மத்தியிலான அளவீடு செப்டம்பர் 2021 இறுதியில் 20.3 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. யூரோ மற்றும் … Read more

தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு குறைந்திருக்கு.. ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன?

2022ம் ஆம் காலாண்டர் ஆண்டில் தங்கம் விலையானது இதுவரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை ஊக்குவித்துள்ளது. இது இன்னும் தொடரலாம் என்ற போக்கே நிலவி வருகின்றது. எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், தற்போது சுமூக தீர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது … Read more

9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம்.. நடப்பு கணக்கு பற்றாக்குறையால் தவிக்கும் இந்திய அரசு!

இந்தியாவில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மிக மோசமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் – டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 23 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! இதுவே கடந்த ஜூலை – செப்டம்பர் காலகட்டத்தில் 9.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன காரணம் இது … Read more

இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.. ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்வது கிரேட் ரிஸ்க்!

உக்ரைன் – ரஷ்யாவின் பதற்றமான நிலைக்கு மத்தியில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்பட , பல தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்திலேயே பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவுக்கு நட்பு நாடாக இருந்து வரும் இந்தியாவுக்கு, மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறியது. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! இந்தியாவோ தனது … Read more

இயற்கை எரிவாயு விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருட்கள் விலையானது அதிகரித்தது. எனினும் இது தற்போது சற்றே குறைந்திருந்தாலும், தொடர்ந்து தேவை அதிகரித்து வரும் நிலையில் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகளும் கச்சா எண்ணெய், நேச்சுரல் கேஸ் இறக்குமதிக்கு ரஷ்யாவுக்கு தடை விதித்துள்ள நிலையில், ஜெர்மனியின் நேச்சுரல் கேஸ் குறித்து எச்சரித்துள்ளது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சமயத்தில் … Read more

சுயம்புவாக வளர்ந்த ராதா வேம்பு.. யார் இவர்..? இந்தியாவின் பணக்கார பெண்..!

இந்திய பணக்கார பட்டியலில் இருக்கும் பெரும்பாலான ஆண் மற்றும் பெண் பில்லியனர்கள் அனைவரும் குடும்ப வர்த்தகம், குடும்பச் சொத்துக்கள் உடன் இடம்பெற்றவர்கள். சொந்தமாக வர்த்தகத்தைத் துவங்கி பில்லியனர் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்தோர் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் குறிப்பாகப் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவில் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகத் தற்போது சுயமாகப் பில்லியனரானோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இப்படிப் பெண்கள் பட்டியலில் புதிதாக இணைந்தவர் தான் ராதா வேம்பு.. … Read more