பெட்ரோல், டீசல் விலை 3வது முறையாக லிட்டருக்கு 80 பைசா உயர்வு.. சென்னை, கோவையில் என்ன விலை..?!

5 மாநில தேர்தலுக்காகச் சுமார் 137 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வையும் செய்யாமல் இருந்த மத்திய அரசு கடந்த 4 நாட்களில் 3 முறை விலையை உயர்த்தியுள்ளது. நேற்று ஒரு நாள் எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாத நிலையில், இன்று 3வது முறையாக லிட்டருக்கு பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் … Read more

இனி தங்கமே இருந்தாலும் பெரிய பயன் இல்லை.. ரஷ்யாவுக்கு செக் வைத்த ஜி7 நாடுகள்..!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 கூட்டமைப்பு சார்பில், ரஷ்யா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நாளுக்கு நாள் இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமானது அதிகரித்து வரும் நிலையில், பல கட்டமாக இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தும், இதுவரையில் சுமூக நிலை ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த … Read more

சென்னைக்கு பெரும் இழப்பு.. ஹைதராபாத் சென்ற அமெரிக்க நிறுவனம்..!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் முக்கியமான ஒரு அமெரிக்க நிறுவனத்தை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாகப் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, வர்த்தகம், முதலீடு, ஏற்றுமதி, தொழில்நுட்பத்தையும் இழந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான குவால்காம், சென்னையை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட்.. எந்த வங்கியில் என்ன விகிதம்.. எது பெஸ்ட்..! குவால்காம் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் … Read more

சோமேட்டோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. கல கல மீம்ஸ்..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது சேவை தரத்தையும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் உயர்த்த சமீபத்தில் சோமேட்டோ இன்ஸ்டென்ட் என்னும் 10 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அரசு அமைப்புகள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியது. இதன் வாயிலாகச் சென்னை போக்குவரத்துப் போலீஸ் துறை இந்த 10 நிமிட டெலிவரியின் செயல் முறை, டெலிவரி செய்பவரின் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்துக் கேள்வி கேட்ட முடிவு … Read more

ரஷ்யாவில் விஸ்வரூபம் எடுக்கும் விலைவாசி உயர்வு.. மக்கள் வேதனை..!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பிரச்சனையானது கிட்டதட்ட 1 மாதத்தினை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் மீது பல்வேறு தடைகளை பல நாடுகளும் விதித்து வருகின்றன. சர்வதேச அளவில் பல பொருட்களின் விலையானது பலத்த உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலை, கோதுமை, பல உலோகங்கள், பல்லேடியம், குறிப்பாக நிக்கல், கச்சா எண்ணெய் விலை என பலவும் ஏற்றம் கண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை, வணிகத் தடை என பல காரணிகளுக்கு மத்தியில் , அங்கு … Read more

19,000 கோடி ரூபாய் இழப்பு.. அழுது புலம்பும் ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல்..!

இந்தியாவின் முன்னணி ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவை கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 5 மாநில தேர்தல் காலக்கட்டத்தின் போது மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல் நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் … Read more

கிரிப்டோகரன்சிக்கு பெருகும் ஆதரவு.. ப்ளோரிடா அதிரடி முடிவு.. முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம்!

கிரிப்டோகரன்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கரங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அரபு நாணய நிதியம் அதன் பொருளாதார அமைப்பில் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இதற்கிடையில் அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா என பல நாடுகளும் கிரிப்டோகரன்சியை சட்டபூர்வமாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில் ப்ளோரிடா கவர்னர் உலக நாடுகளின் கவனத்தினை ஒரே அறிவிப்பில் தன் பக்கம் திருப்பியுள்ளார் எனலாம். 30 நாளில் 1000% லாபத்தை கொடுத்த புதிய கிரிப்டோ.. மிஸ் … Read more

ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள்?

மார்ச் மாதம் முடிய, நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்திற்காக விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் வார விடுமுறை உட்பட 15 நாட்கள் வங்கி விடுமுறையாகும். இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்! இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் … Read more

முகேஷ் அம்பானி-யின் 600 ஏக்கர் மாந்தோப்பு.. ஆசியாவிலேயே இதுதான் டாப்பு..!

முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, டெலிகாம், ரீடைல் துறையில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் இந்தியாவின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஆசியாவிலேயே மிகப்பெரிய மா தோப்பை வைத்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விவசாயத்தில் இறங்க மிக முக்கியமான காரணமும் உள்ளது. பில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் … Read more

முழுக்க முழுக்க பெண்கள்.. எப்படி இருக்கும்..? ஜெட் ஏர்வேஸ் சிஇஓ கொடுத்த ‘நச்’ பதில்..!

ஏர் இந்தியாவை போல் பல போராட்டத்திற்கு பின்பு ஜெட் ஏர்வேஸ், முடங்கியிருந்த விமான சேவையை விரைவில் துவங்க பள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக சஞ்சீவ் கபூர் நியமிக்கப்பட்டார். இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்! இந்நிலையில் இவருடைய நியமனத்திற்கு பின்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல நிர்வாக மாற்றங்களையும், செயல்முறை மாற்றங்களையும் செய்து வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் முக்கியமான … Read more