முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம்.. ஆடைகள் நிறுவனத்தில் ரூ.950 கோடி முதலீடு..!

நாட்டின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி தொடர்ந்து தனது வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக பல்வேறு விதமான துறைகளில் முதலீடு செய்து வருகிறார். குறிப்பாக அதன் சில்லறை வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வருகின்றார். பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியும், பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்தும் விரிவாக்கம் செய்து வருகின்றார். குறிப்பாக அத்தியாவசிய தேவைகள், ஆடைகள், காலணிகள், நகைகள் என ஒவ்வொரு துறையிலும் முதலீடுகளை செய்து வருகின்றார். இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் … Read more

ருச்சி சோயாவின் FPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் ஃபாலோ ஆன் பப்ளிக் (FPO) மூலம் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. அதெல்லாம் சரி அதென்ன ஃபாலோ ஆன் பப்ளிக்? எஃப்பிஓ என்பது ஏற்கனவே பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள ஒரு நிறுவனம், கூடுதல் பங்குகளை மீண்டும் பொது மக்களுக்கு வெளியிடுவதாகும். இதனை தொடர் பங்கு வெளியீடு என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது ருச்சி சோயா நிறுவனம் அதன் தொடர் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. பதஞ்சலி … Read more

இந்தியாவில் குவியும் முதலீடுகள்.. ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா அதிரடி..!

இந்தியா ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாட்டில் பல்வேறு துறைகளில் 1500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரப்பில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இம்மாத இறுதிக்குள் ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு முன் வரைவு ஒப்பந்தம் செய்து கொள்ளும். சில பொருட்களின் மீதான கட்டணங்களை தாராளமயமாக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் அமையவுள்ளது. அரசு நிலம், கட்டிடங்களை பணமாக்க புதிய நிறுவனம்.. மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல்..! ஆஸ்திரேலியாவின் சிறப்பு குறிப்பாக இவ்விரு நாடுகளும் … Read more

முதலீட்டாளர்களுக்கு செம லாபம்.. ஒரே வாரத்தில் ரூ.2.72 லட்சம் கோடி லாபம்.. வழக்கம்போல RIL தான்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது நல்ல ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனகளின் சந்தை மூலதன மதிப்பானது, 2,71,184.67 கோடி ரூபாய் அதிரித்துள்ளது. இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும் உள்ளது. இதற்கிடையில் 30 நிறுவனங்களை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 2313.63 புள்ளிகள் அல்லது 4.16% அதிகரித்தும், நிஃப்டி 3.95% அதிகரித்தும் காணப்பட்டது. டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் … Read more

டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் விலை அதிகரிப்பு தெரியுமா?

மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது மொத்த பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் 40% அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.10,440 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா? டீசல் விலை அதிகரிப்பு எனினும் சில்லறை பம்புகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் … Read more

இந்தியாவில் ரூ.10,440 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஜப்பானின் முன்னணி ஆட்டோ நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் 10,440 கோடி ரூபாய் முதலீட்டினை, மின்சார வாகன உற்பத்திக்காக இந்தியாவில் செய்யவுள்ளது. இதன் மூலம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் குஜராத் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 150 பில்லியன் யென் மின்சார வாகன உற்பத்திகாக முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரூ.4.99 லட்சத்தில் களமிறங்கும் மாருதி சுசுகி செலிரியோ.. முக்கிய அம்சங்கள் என்ன..! … Read more

இந்தியாவின் அதிரடி திட்டம்.. ரஷ்யா, ஈரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. !

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் கண்டது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது இன்னும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஜூம் காலில் பணி நீக்கம்.. பெட்டர்.காமை போல பி&ஓ ஃபெரிஸ்.. ஊழியர்கள் கண்ணீர்..! எண்ணெய் வணிகத்தில் … Read more

மீண்டும் ஒரு ஜூம் காலில் பணி நீக்கம்.. பெட்டர்.காமை போல பி&ஓ ஃபெரிஸ்.. ஊழியர்கள் கண்ணீர்..!

பெட்டர்.காமின் தலைமை செயல் அதிகாரி விஷால் கார்க்கினை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரே ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விஷால் கார்க் நியூயார்க் நகரில் செயல்படும், பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர். இவர் தான் வெறும் 3 நிமிட ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர். பெட்டர்.காமின் இந்த நடவடிக்கையானது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த … Read more

தங்கம் விலை ரூ.4000 சரிவு..இது வாங்க சரியான இடமா.. இனி வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் சமீபத்திய உச்சத்தில் சரிவில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கும் விதமாகவே பல காரணிகள் உள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது வந்துள்ளது. எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்தத்து. இது தங்கம் விலையில் சற்றே தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே சற்று சரிவினைக் கண்டு இருந்தது. ரூபாய் மதிப்பு சரிவு.. … Read more

ரூபாய் மதிப்பு சரிவு.. ஆர்பிஐ எடுத்த நடவடிக்கை.. 2 வருட சரிவில் அந்நியச் செலாவணி..!

இந்தியாவின் அந்நியச் செலாவணி (அந்நிய செலாவணி) கையிருப்பு மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.646 பில்லியன் டாலர் குறைந்து 622.275 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத கடுமையான சரிவாக உள்ளது. ரூபாயின் மதிப்பு சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கையிருப்பில் இருக்கும் டாலரை அதிகமாக விற்றதனால் ஏற்பட்ட சரிவு தான் இது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 75.95 ஆக உள்ளது. மத்திய … Read more