மாணவிகளுக்கு ரூ.1000 முதல் தொழிற்துறை பூங்காக்கள் வரை.. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அறிவிப்புகள்

நடப்பு நிதியாண்டிற்காக தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் பற்பல அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக தொழிற்துறையினை மேம்படுத்தும் விதமாக பல அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக பட்ஜெட்டின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு நோயற்ற வாழ்வு, நல்ல விளைச்சல், பொருளாதார வளம், பாதுகாப்பு, இன்ப நிலை என ஐந்தும் அவசியம் என ” பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற குறளுடன் ஆரம்பித்தார். பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? எதற்கு … Read more

திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மொபைல் தகவல் சென்டர்கள்.. எதற்காக..?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை முதல் முறையாக திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்துறை என பல முக்கிய துறைகளிலும் கவனம் செலுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..! மொபைல் தகவல் … Read more

தங்கம் விலையில் தொடரும் சரிவு.. ஆனா நகை கடையில் எந்த மாற்றமும் இல்லை.. மக்கள் கவலை..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில், இன்று மீண்டும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அமர்வில் அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்ததாக செய்திகல் வெளியானாலும் தங்கம் விலையானது சற்றே ஏற்றத்திலேடே காணப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் சர்வதேச சந்தையில் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையானது இன்று ஹோலியை முன்னிட்டு விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வு உண்டு. ஆக சர்வதேச சந்தையின் எதிரொலியானது இன்று மாலை நேர வர்த்தகத்தில் இருக்கலாம். அப்போதும் பெரும் … Read more

சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..!

கல்வி, தொழிற்துறை எனப் பல துறையில் தமிழ்நாடு இன்று முன்னோடியாக இருக்கத் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்படும் திட்டங்களைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செயல்படுத்தியதால் மட்டுமே இத்தகைய உயர்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வகையில் வானிலை மற்றும் வானிலை சார்ந்த கணிப்புகள், ஆய்வுகள், கணக்கீடுகளைச் சரியமான முறையிலும், முன்கூட்டியே கணிக்கும் வகையில் தமிழக அரசு சூப்பர் கம்பியூட்டர் உருவாக்கும் முக்கியமான திட்டத்தை 2022 -23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் … Read more

தமிழ்நாட்டின் நிதிபற்றாக்குறை 4.61% இருந்து 3.8% ஆகக் குறையும் – பிடிஆர்

தமிழகச் சட்டசபையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்துள்ள முழு முதல் பட்ஜெட் ஆகும். 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையும் கடந்த ஆண்டை போலவே டிஜிட்டல் பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ராணுவ பட்ஜெட்-ஐ உயர்த்திய சீனா.. இந்தியாவுக்குப் பாதிப்பா..?! நிதி பற்றாக்குறை அளவு தமிழ்நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு இந்த ஆண்டு 4.61 சதவீதத்தில் … Read more

டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்.. பிடிஆர்-க்கு மிகப்பெரிய சவால்..! #TNBudget2022

டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்வது மூலம் 2003ஆம் ஆண்டில் இருந்து இப்பிரிவில் தமிழக அரசு மிகப்பெரிய ஆதிக்கம் செய்தாலும், மதுபான விற்பனையில் சுமார் 50 சதவீத கலால் வரி வருமானத்தைத் தமிழக அரசு இழந்து வருவதாக இன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார், இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபான வியாபாரத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்துவது மட்டும் அல்லாமல் வரி ஏய்ப்புச் செய்யப்படும் வழிகளையும், வருவாய் … Read more

ஊழியர்கள் மனம் குளிரவைத்த IDFC பர்ஸ்ட் வங்கி சிஇஓ..!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ வி வைத்தியநாதன், இறந்த சக ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவருக்குச் சொந்தமான வங்கி பங்கு இருப்பில் இருந்து சுமார் 5 லட்சம் பங்குகளைப் பரிசாக அளித்துள்ளார். வைத்தியநாதன் ஏற்கனவே தனது பங்குகளைத் தனது பயிற்சியாளர், வீட்டு உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வீடுகளை வாங்க உதவுவதற்காகப் பரிசளித்த நிலையில், தற்போது மறைந்த தனது ஊழியர்களின் குடும்பத்திற்காக அளித்துள்ளார். … Read more

புதுச்சேரி, கேரளா-விடப் பின்தங்கிய தமிழ்நாடு.. பட்ஜெட்டில் சரி செய்யப்படுமா..?!

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழக அரசு பள்ளிகளில் 18 சதவீதம் மட்டுமே இணைய இணைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவை விடவும் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 சதவீத பள்ளிகளில் செயல்படும் கணினிகள் இருந்த போதிலும் அரசுப் பள்ளிகளில் மோசமான இணைய இணைப்பு இருக்கும் காரணத்தால் கணினிகளை முழுமையாக இயங்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் மாநிலங்கள் மத்தியில் பெரிய வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது எனக் கல்வி … Read more

கிரிப்டோகரன்சியில் உங்கள் பணத்தை இழக்க தயாராகுங்கள்.. எச்சரிக்கும் EU கட்டுப்பாட்டாளர்கள்!

கிரிப்டோகரன்சி எதிர்காலத்தில் தங்கத்திற்கு இணையாகலாம். தங்கத்திற்கு மாற்று கிரிப்டோகரன்சிகள் தான். தங்கத்தினை தாண்டி செல்லலாம். கிரிப்டோகரன்சிகள் உற்பத்தி தேவையின் அடிப்படையில் விலை ஏற்ற இறக்கம் காண்பதில்லை. அது ஒரு வகையான யூகத்தின் கீழ் வர்த்தகமாகி வருகின்றது. இது பிளாக் செயின் தொழில் நுட்பத்தில் நிகழும் வணிகம் என்பதால், அதனை அவ்வளவு எளிதில் அழித்து விடவும் முடியாது என வெவ்வேறு விதமாக கருத்துகள் நிலவி வருகின்றன. மொத்தத்தில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யலாமா? அது சரியானதா? அல்லது தவறான முடிவா? … Read more

கரூர் மக்கள் வேண்டுகோள்.. பட்ஜெட்டில் பதில் கிடைக்குமா..?!

மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல வளர்ச்சி மற்றும் வருவாய் ஈட்டும் திட்டங்கள் இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்க்கப்படும் நிலையில் கரூர் மக்களின் முக்கியமான கோரிக்கை தமிழக அரசின் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறுமா என் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெற்றிலை விவசாயிகள் வரவிருக்கும் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் அம்மாநிலத்தில் வெற்றிலை ஆராய்ச்சி அமைப்பு-ஐ நிறுவுவது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ‘ஸ்மார்ட் பஜார்’ … Read more