ஒரு பங்கு விலை 3,83,48,154.88 ரூபாய்.. அடேங்கப்பா..!

இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கும் MRF, ஹனிவெல் ஆட்டோமேஷன், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீ சிமெண்ட், 3எம் போன்ற விலை உயர்ந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கும். ஆனால் அதிகப்படியான விலை காரணமாக ரீடைல் முதலீட்டாளர்கள் இத்தகைய விலை உயர்ந்த பங்குகளை வாங்குவது இல்லை, ஆனால் பெரும் முதலீட்டாளர்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்கும் சில பங்குகளில் இந்த விலை உயர்ந்த பங்குகளாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு பங்கு விலை 3.83 … Read more

டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட திட்டம்.. ரூ.15,000 கோடி முதலீடு.. போட்டி நிறுவனங்கள் கவலை..!

சமீபத்திய காலமாக ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகன புரட்சியானது வேகமெடுத்துள்ளது எனலாம். குறிப்பாக இந்திய அரசு மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இதன் மூலம் வாகன நிறுவனங்கள் உற்பத்தியினை அதிகரிக்க ஆர்வம் காட்டலாம் என அரசு நம்புகின்றது. மேலும் மின்சார வாகனங்களை நோக்கிய பயணம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவும் மாறியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவினை பொறுத்தவரையில் அதிகம் இல்லை. மாறாக தற்போது தான் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் … Read more

கரடியின் பிடியில் சிக்கியுள்ள காளை.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. தொடரும் ஏற்ற இறக்கம்..ஏன்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்திலேயே காணப்பட்டது. எனினும் மீண்டும் தற்போது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் மீதான தாக்குதலை வேகப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் நேட்டோ நாடுகளை எச்சரித்துள்ளது. அதில் ரஷ்ய படைகள் போலந்து எல்லை வரையில் தாக்குதலை நடத்தி வருகின்றன. அடுத்ததாக போலந்தினை கூட ரஷ்யா தாக்கலாம் என … Read more

தங்கம் விலை ரூ.3800 மேல் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி.. இனியும் குறையுமா.. வாங்க சரியான இடமா..?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வந்த நிலையில், மீண்டும் குறைந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..! எனினும் இந்த … Read more

ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் – அமேசான்: பேச்சுவார்த்தை தோல்வி.. மீண்டும் வழக்கு..!

ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் – அமேசான் மத்தியிலான வழக்கு 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 3ஆம் தேதி இப்பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப் பியூச்சர் குரூப் – அமேசான் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அனைத்து தரப்பினரும் விரைவில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய குண்டை போட்ட காரணத்தால் மொத்தமும் தலைகீழாக மாறியது. நீதிமன்றம் ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் … Read more

பீட்சா-க்கு வந்த புதிய பிரச்சனை.. இனி 18 சதவீத கூடுதல் ஜிஎஸ்டி வரி..!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான மேற்கத்திய உணவுகளில் ஒன்றான பீட்சா மீதான ஜிஎஸ்டி வரியில் புதிய மாற்றம் செய்ய ஹிரியானா முன்கூட்டியே தீர்ப்பு மேல்முறையீட்டு அதிகார அமைப்பு (AAAR) உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி அதிகமாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் தனது வரி விதிப்பு பலகையை மறு சீரமைப்பு செய்யவும், கீழ்தட்டு வரி அளவீட்டை உயர்த்த ஆலோசனை செய்து வருகிறது. ரூ.7 டூ ரூ.59.. பென்னி ஸ்டாக்ஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இந்த … Read more

புதிய டெக் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றம்.. ரூ.2.2 லட்சம் கோடி நஷ்டம்..!

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்து முதலீடு செய்த பல முன்னணி டெக் நிறுவனங்கள் தற்போது அதிகளவிலான நஷ்டத்தை அளித்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் ஐபிஓ வெளியிட்ட பின்பு நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாப அளவீடுகள் குறைந்தும், தொடர்ந்து அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்வது தான். அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்தியச் சந்தையிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிகம் செலுத்தும் என்று நம்பி முதலீடு … Read more

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் தொடர் சரிவு.. இனியும் முதலீடு செய்யலாமா..?!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்த மிக முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம் பல கோடி மக்கள் பலன் அடைந்து வரும் நிலையில் கடந்த 7 வருடத்தில் மத்திய அரசு இத்திட்டத்தின் மீதான முதலீட்டுக்கான வட்டி வருமானத்தைக் குறைத்து வருகிறது. 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!! இதனால் பெரும் கனவுகளுடன் முதலீடு செய்த பல கோடி … Read more

சோமேட்டோ – Blinkit இணைப்பு.. இனி யாராலும் அசைக்க முடியாது..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ ஐபிஓ வெளியிட்ட பின்பு அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், மத்திய அரசின் புதிய வரி விதிப்பு, வர்த்தக மாற்றங்கள் மறு சீரமைப்பு மற்றும் சில உயர் அதிகாரிகள் வெளியேற்றம் ஆகியவற்றின் மூலம் தடுமாற்றம் அடைந்து வந்தது. 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!! ஆனால் வர்த்தக விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் தொடர்ந்து வளர்ச்சி … Read more

ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..!

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது. தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்! இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.7 ஆண்டுகளில் … Read more