பாக்ஸ்கான் உடன் கூட்டணி போட்ட ஏதர் எனர்ஜி.. ஓலா உடன் போட்டிக்கு தயார்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..? இந்நிலையில் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி சென்னை நிறுவனத்துடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஏதர் எனர்ஜி ஏதர் எனர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாக்ஸ்கார்ன் டெக்னாலஜி … Read more

எல்ஐசி IPO-வுக்கு செபி ஒப்புதல்.. எப்போது வெளியீடு.. ?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி (LIC)யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்காக செபி அனுமதி கொடுத்துள்ளது. எனினும் தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் இந்த பங்கு விற்பனையானது தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. எல்ஐசி தனது பங்கு வெளியீட்டுக்கான வரைவினை கடந்த மாதமே செபியிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், தற்போது தான் அனுமகி கிடைத்துள்ளது. எல்ஐசி-யில் மத்திய அரசின் வசம் இருக்கும் பங்குகள் 5% அல்லது 31.62,49,885 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் … Read more

3000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சொன்னதைச் செய்த Better.com விஷால் கார்க்..!

அமெரிக்காவின் முன்னணி ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் 3 மாதங்களுக்கு முன்பு 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்பு அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து ஊழியர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட விஷால் கார்க் பெட்டர்.காம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தார். இதன் வாயிலாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்களில் சுமார் 3000 பேரை ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளார் விஷால் கார்க். அடுத்த ஜூம் … Read more

ரஷ்யா – உக்ரைன் போரால் டிசிஎஸ் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்-க்கு புதிய பிரச்சனை..!

ரஷ்யா உக்ரைன் போர் மூலம் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஐடி துறை மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..? ரஷ்யா தொடுத்துள்ள போர் மூலம் ஐடி துறைக்குத் தற்போது பல பிரச்சனைகள் அடுத்தடுத்து உருவாகியுள்ளது. 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை ரஷ்யா உக்ரைன் போர் நிலவரத்தையும், அதன் மூலம் ஏற்படும் வர்த்தகப் பாதிப்பையும் தொடர்ந்து ஆய்வு … Read more

அடித்தது ஜாக்பாட்.. இனி முகேஷ் அம்பானிக்கு செம லாபம்..! ஐரோப்பாவுக்கு டீசல் ஏற்றுமதி..!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-க்குத் தடை விதித்துள்ளது, பிரிட்டனும் படிப்படியாகக் குறைக்க முடிவு எடுத்துள்ளது. இதற்கிடையில் ஐரோப்பா போதுமான கச்சா எண்ணெய், எரிபொருள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்த வர்த்தக வாய்ப்பை சரியான நேரத்தில் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். ரஷ்யா – உக்ரைன் போரால் டிசிஎஸ் விப்ரோ, இன்போசிஸ், … Read more

ரஷ்யாவுக்கு எதிராக சிங்கப்பூரின் அறிவிப்பு.. இது பெரும் ட்விஸ்ட் தான்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. பல நாடுகளும் பொருளாதார நடவடிக்கை, எண்ணெய் வணிகத்திற்கு தடை, ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவு தடை என தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் ரஷ்யாவுக்கும் பெரும் இழப்பு ஏற்படலாம் என்றாலும், இதுவரையில் இது குறித்து பெரியளவில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக ரஷ்யாவே அண்டை நாடுகளுக்கு எதிராக சில தடைகளை விதிக்க … Read more

TN Budget 2022: விவசாயிகளுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..?!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வருகிற மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் 2வது விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! உக்ரைன் – ரஷ்யா போருக்குப் பின் இந்தியா விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியிருக்கும் … Read more

அரசு நிலம், கட்டிடங்களை பணமாக்க புதிய நிறுவனம்.. மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல்..!

இந்தியாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள், நிலம், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பணமாக்கும் திட்டத்தைச் சில மாதங்களுக்கு முன் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைத் திறம்பட நிர்வாகம் செய்து பணமாக்க புதிய நிறுவனத்தை மத்திய அரசு துவங்க மத்திய … Read more

1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,350 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடன் சமாதான பேச்சுக்கு தயார். நேட்டோவுடன் இணைய உக்ரைன் முயற்சி செய்யாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா இடையே சமாதானம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கி உயர் அதிகாரி கைது.. ரூ.400 கோடி கடன் மோசடியில் தொடர்பு..!

காசியாபாத்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெட்டர் நொய்டா கிளையின் தலைமை மேலாளர், முதன்மை குற்றவாளியான லக்ஷய் தன்வாருடன் இணைந்து 400 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுப்பட்டதாக காசியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். கடன் மோசடி குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கிரேட்டர் நொய்டாவில் உள்ள வங்கியின் மேலாளர் உட்கர்ஷ் குமாரை கைது செய்துள்ளதாக, அந்நகர காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக குமார் பஞ்சாப் வங்கியில் சந்திரா நகர் கிளையில் … Read more