பெட்ரோல் லிட்டருக்கு 12 ரூபாய் உயரும்.. ஜகா வாங்கிய OPEC நாடுகள்.. ரெடியா இருங்க..!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாகக் கடந்த 4 மாதங்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஓரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 120 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்த விலை வித்தியாசத்தைச் சமாளிக்க வேண்டும் என்றால் கட்டாயம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டாயம் உயர்த்த வேண்டும், இல்லையெனில் அரசு மிகப்பெரிய சிக்கலில் … Read more

ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் – ரஷ்யா மோதல் தான் காரணம்..!

இந்தியாவில் கணிசமான அளவு வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் ஐடி துறையானது, கடந்த சில ஆண்டுகளாக துரிதமான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி, பணியமர்த்தல் விகிதம், சம்பள உயர்வு, பணி உயர்வு, பல புதிய ஒப்பந்தங்கள் என பெரும் பரபரப்பாக செயல்பட்டு வந்தன. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ஓராண்டிலேயே இருமுறை சம்பள உயர்வு. அதுவும் இரு இலக்கங்களில் அதிகரிப்பு என களை கட்டி வந்தது. ஐடி துறையில் நிலவி வரும் இந்த போக்கானது இன்னும் … Read more

பில் கேட்ஸ் கள்ள தொடர்பு.. உண்மையை உடைத்த மெலிண்டா.. விவாகரத்துக்கு இதுதான் காரணம்..!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது காதல் மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ஐ 27 வருடத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய முடிவு செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இவர்களின் விவாகரத்துக்குப் பின் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பெரிய அளவில் வெளியுலகத்திற்கு வராத நிலையில் மெலிண்டா தனது விவாகரத்து குறித்தும், விவாகரத்துக்குக் காரணத்தையும் CBS பேட்டியில் தெரிவித்துள்ளார். நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, … Read more

நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, பேஸ்புக், கூகுள் ப்ளே-க்கு தடை விதித்த ரஷ்ய அரசு!

உலக நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது அடுத்தடுத்துத் தடை விதித்து வந்த நிலையில், இன்று விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு, அறிவிக்கப்படாத தடையா பல வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிக்கை நிறுவனங்களின் தளத்தை முடக்கப்பட்டு உள்ளது. இதனால் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சேவையை ரஷ்யாவில் மொத்தமாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. நீங்க என்ன என்னைத் தடை பண்றது, நானே பன்றேன் என்ற தொனியில் புதின் … Read more

இந்திய-வின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை.. என்ன காரணம் தெரியுமா..?

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே 8 வருட உயர்வை தொட்டு உள்ளது, இது இந்திய சந்தையை மிகப்பெரிய அளவில் அடுத்த வாரம் முதல் பாதிக்கப்போகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய கனவான உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்வது மட்டும் அல்லாமல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. 7வது சம்பள கமிஷன்.. ரூ.90,000 வரை சம்பளம் அதிகரிக்கலாம்.. இன்னும் பல சூப்பர் அப்டேட்கள்..! சாலை கட்டுமானம் மத்திய … Read more

7வது சம்பள கமிஷன்.. ரூ.90,000 வரை சம்பளம் அதிகரிக்கலாம்.. இன்னும் பல சூப்பர் அப்டேட்கள்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% மார்ச் மாதத்தில் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் அல்ல அவர்களின் ஊதியம் 90,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் பல நன்மைகள் காத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH ரூ.90,000 வரை அதிகரிக்கலாம் இது 3% … Read more

ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக நாடுகளின் தடைகள் வேலை செய்யத் துவங்கியது..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா பல ஆண்டுகள் திட்டமிட்டு தனது நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொண்டு உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லாத போதும் நேட்டோ படைகள் உக்ரைன் நாட்டில் களமிறக்கப்பட்ட காரணத்தால் ரஷ்யா தனது பெரும் படையைக் கொண்டு உக்ரைன் நாட்டிற்குள் வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் சேவைகள் எனத் தொடர்ந்து பல … Read more

சூப்பர் சான்ஸ்.. ரூ.490 டிவிடெண்ட்.. பங்கு விலையும் அதிகரிக்கலாமாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது பெரும் ஆட்டத்தினை கண்டு வருகின்றது. அதிலும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கிய பின்பு மீண்டும் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தினை கண்டுள்ளனர். எனினும் நீண்டகால முதலீடுகள் லாபகரமானதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது சனோஃபி இந்தியா நிறுவனம் பற்றித் தான். இது இந்த நெருக்கடியான கட்டத்திலும் அதன் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸ்-னினை … Read more

ரஷ்யாவுக்கு எதிராக சீனா எடுத்த முடிவு.. ஷாக்கான புதின்..!

உக்ரைன் போர் தொடுத்த காரணத்திற்காக உலகில் பல நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு தடையை விதித்து வரும் நிலையில், இன்று ரஷ்யாவின் நட்பு நாடு எனக் கூறப்பட்டு வரும் சீனா ஆதிக்கம் செலுத்தும் ஒரு முக்கியமான அமைப்பு ரஷ்யா மீது புதிய தடையை விதித்துள்ளதால் ரஷ்ய அதிபரான விளாடிமீர் புதின் அதிர்ச்சி அடைந்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா சர்வதேச சந்தையில் … Read more

சென்னைக்கு வந்த ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. டாடா கொடுத்த ஐடியா..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை ஓரம்கட்டிவிட்டு வேகமாக வளர்ந்து வரும் அனைத்து துறையிலும் தொடந்து முதலீடு செய்து தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்தியா பொருளாதாரம் இனி வரும் காலகட்டத்தில் ஏற்றுமதியை நம்பி பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளதால் உலகம் முழுவதும் எப்போதும் டிமாண்ட் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களமிறங்கியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – Sanmina SCI இந்தியாவில் … Read more