ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய இந்தியா முடிவு.. புதிய திட்டம் தீட்டும் ஆர்பிஐ..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நிதியியல் தடைகளை விதித்த நிலையில், இந்தியா மட்டும் ரஷ்யா உடனான நீண்ட கால நட்பை முக்கியமானதாகக் கருதி எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் தடை விதிக்கும் கூட்டணியில் இருந்து இந்தியா ஒதுங்கியது. இந்நிலையில் இந்தியா ரஷ்யா உடன் முன்பை விடவும் அதிகமாக வர்த்தகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்காக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் … Read more

தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு?

தங்கம் விலையானது கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்று சற்று குறைந்துள்ளது. எனினும் சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதற்கு மத்தியில் தங்கம் விலையானது குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு வாங்க மிகச்சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மீண்டும் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா? இனியும் … Read more

அமெரிக்க டெக் நிறுவனத்தில் இனி நேரடியாக முதலீடு செய்யலாம்.. NSE அறிவிப்பு..!

என்எஸ்ஈ இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் (NSE IFSC), இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (NSE) கீழ் உருவாக்கப்பட்ட துணை நிறுவனமாகும். NSE IFSC தளத்தின் மூலம் முதற்கட்டமாக 8 அமெரிக்க டெக் நிறுவன பங்குகளில் இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்து, வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அமெரிக்கப் பங்குகளின் முழு வர்த்தகம், கிளியரிங்,செட்டில்மென்ட் மற்றும் ஹோல்டிங் ஆகிய அனைத்தும் என்எஸ்ஈ IFSC ஆணையத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் இருக்கும். 20 ஆண்டு திட்டம்… 45 வயதிலேயே ஓய்வுகாலத்திற்கு … Read more

20 ஆண்டு திட்டம்… 45 வயதிலேயே ஓய்வுகாலத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்.. ரெடியாகிக்கோங்க..!

இன்றைய காலகட்டத்தில் பலரும் நினைப்பது இளமை காலகட்டத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஓய்வூகாலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்யலாம், வாருங்கள் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் டெக் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் நினைப்பது, கொஞ்ச காலத்திற்கு பணிபுரிந்து விட்டு, பிறகு நிம்மதியாக சொந்த ஊரில் ஏதேனும் வணிகத்தினை செய்து வாழவே விரும்புகின்றனர். இதே தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஒரு கட்டத்திற்கு மேல், அரசு ஊழியர்களைப் போலவே … Read more

பலத்த பிரச்சனையை எதிர்கொள்ள போகும் 51 நிறுவனங்கள்.. ரஷ்யாவால் வந்த விளைவு.. ஏன்?

ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்து வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு நாட்டினை சேர்ந்த நிறுவனங்களும் ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவினையே முறித்துக் கொண்டு வருகின்றன. இதற்கிடையில் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம், 51 ரஷ்ய நிறுவனங்களின் ரேட்டிங்ஸை குறைக்க திட்டமிட்டுள்ளது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இது ஏற்கனவே பங்கு சந்தையில் பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், மேற்கொண்டு சரிவினைக் காண வழிவகுக்கலாம். தர மதிப்பீடு பிப்ரவரி 25 … Read more

ரஷ்ய முதலாளிக்கு ஆப்பு வைத்த உக்ரைன் ஊழியர்.. துளியும் வருத்தம் இல்லையாம்..!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் உலக நாடுகள் மத்தியில் பதற்றமான நிலை உருவாக்கியுள்ளது, இந்நிலையில் உக்ரைன் மக்கள் மத்தியில் ரஷ்யா மீதான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. ரஷ்ய அரசின் இந்தப் போரை எதிர்த்து ரஷ்ய நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், உக்ரைன் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள வெறுப்புணர்வு, கோபம், சோகம், கண்ணீரை விளக்க வார்த்தைகள் இல்லை. இந்த நிலையில் ஸ்பையின் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், உக்ரைன் ஊழியர் ஒருவர் ரஷ்ய முதலாளியைப் … Read more

காங்கிரஸ்-க்கு வந்த அதே பிரச்சனை இப்போ மோடி அரசுக்கு வந்துள்ளது.. தாக்குப்பிடிக்குமா..?!

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், உலக நாடுகளில் கச்சா எண்ணெய் இருப்பும் வேகமாகக் குறைந்து வருவதால் இதன் விலை வேகமாக உயர துவங்கியுள்ளது. இதைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் விலை உயர மிக முக்கியமான காரணமும் உண்டு. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையால் இந்திய பொருளாதார வளர்ச்சி சின்னாபின்னமாகும் நிலை உருவாகியுள்ளது. பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 … Read more

அடடா.. இது அருமையான யோசனை.. அசர வைத்த ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்..!

எப்போதும் சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஆனந்த் மகேந்திரா, அவ்வபோது சுவாரஸ்யமான, யோசிக்க வைக்கும் படங்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கமான விஷயம். அப்படி அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பல ஆயிரம் பேரை ரசிக்க வைத்துள்ளது. யோசிக்கவும் வைத்துள்ளது. உண்மையில் அப்படி என்ன தான் வீடியோவினை பகிர்ந்துள்ளார். முழு விவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். ரஷ்யா சைபர் க்ரைம்-ஐ ஆயுதமாக பயன்படுத்த போகிறதா..? புதின் திட்டம் என்ன?! அமெரிக்கா கவலை?! என்ன ஒரு … Read more

வல்லரசு நாடுகள் ரஷ்யாவுக்கு வைக்கும் புதிய செக்.. புதின் என்ன செய்யப் போகிறார்..!

ரஷ்யா ஒரு நாளைக்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி உற்பத்தியை உள்நாட்டு தேவைக்காக இதுநாள் வரையில் பயன்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மீதான போர் காரணமாக இராணுவ உபகரணங்களுக்குக் கூடுதலான எரிபொருள் தேவைகள் காரணமாக உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி செய்யும் அளவீட்டில் தடுமாற்றம் ஏற்பட்டு தினமும் 5 மில்லியன் முதல் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகள் ரஷ்யா மீது பல … Read more

ஹூண்டாய், மாருதி சுசூகி-யை ஓரம்கட்டிய கியா.. அடேங்கப்பா..!

பிப்ரவரி மாதம் இந்தியாவில் வாகன விற்பனை சந்தையில் சில நிறுவனங்கள் மந்தமான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்தாலும், பல நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையை நீண்ட காலமாகப் பாதித்து வந்த சிப் தட்டுப்பாடு, சப்ளை செயின் பிரச்சனைகள் பிப்ரவரி மாதம் குறைந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்து வரும் காரணத்தால் கார், பைக் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலை அதிகரித்து … Read more