எல்ஐசி ஐபிஓ ஒத்திவைப்பு.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?!

மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடந்த 2 மாதத்தில் ஏற்பட்ட கடுமையான தடுமாற்றத்தில் அதிகளவிலான முதலீட்டை இழந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் லாபம் அளிக்கும் அதேவேளையில் பாதுகாப்பான முதலீட்டை தேடி வருகின்றனர். இந்நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களின் தேவையைத் தீர்க்க எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ-வுக்காகக் காத்திருக்கும் நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றே கடைசி நாள்.. கண்டிப்பா இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்க அவசியம்! உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, … Read more

சுற்றி சுற்றி அடி வாங்கும் ரஷ்யா.. இனி இதிலும் பிரச்சனை தான்..!

உக்ரைனில் 6வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகள் குறிப்பிட்டு முக்கிய பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ரஷ்யா படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆங்காங்கே பின்னடைவையும் சந்தித்து வருகின்றன. கீவ் தாக்குதல் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், உக்ரைனில் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவால் அணு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. உக்ரைன் போர் பதற்றத்தால் BPCL-க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை! தகவல் … Read more

19,000 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்த மத்திய அரசு..!

மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவை மூலம் இணைப்பதற்காக 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை வெளியிட்டு இருந்தது. இந்த டெண்டரை கைப்பற்றத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் மத்திய அரசின் உத்தரவின் படி பாரத் பிராட்பேண்ட் நிகாம் இந்த 19000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் மாற்றம்.. ஏப்ரல் 4 முதல் அமல்.. கவனமா இருங்கப்பு!

காசோலை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System) என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதனை பல வங்கிகளும் படிப்படியாக அமலுக்கு கொண்டு வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய காசோலை விதிமுறைகள் ஏப்ரல் 4 முதல் அதன் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH மோசடிகள் தவிர்க்கலாம் பிஎன்பியின் புதிய விதிமுறைகளின் படி, … Read more

உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. !

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், இன்று ஆறாவது நாளாக உச்சத்தினை எட்டியுள்ளது. பெலராஸில் நடந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும், பதற்றமான நிலையே இன்னும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தரையில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பல், ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் என மும்முனைகளிலும் படைகள் தயாராக இருப்பதாக தகவல்க வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன் மத்தியில் தான் உக்ரைனில் கீவ் நகரில் உள்ள இந்தியர்களை எந்த … Read more

ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடுக்குப்பிடி போடும் அமெரிக்கா.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலையானது உலக அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 6வது நாளாக போர் பதற்றம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக உக்ரைனின் வேகத்தினை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மக்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள் என அங்கும் இங்கும் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர். சில … Read more

டாடா-வின் ஆஃபரை தூக்கி எறிந்த இல்கர் ஆய்சி.. மோடி அரசு தான் காரணமா..?! #AirIndia

மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் கைப்பற்றிய ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இன்னும் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படாமல் இயங்கி வருகிறது. பல மாதங்களாகக் கடுமையான திட்டமிடல், ஆலோசனைக்குப் பின்பு துருக்கி ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் ஆய்சி-ஐ நியமிக்கச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் நிர்வாகம் பிப்ரவரி 14ஆம் தேதி முடிவும் செய்தது. இல்கர் ஆய்சி நியமனத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்ட … Read more

NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

என்எஸ்ஈ அமைப்பில் பல முறைகேடுகளைச் செய்துள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை செபி, வருமான வரித் துறை, சிபிஐ என அரசு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா தனது சென்னை வீட்டை ஆனந்த் சுப்பிரமணியனுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? என்எஸ்ஈ சித்ரா வழக்கு இந்தியாவிலேயே மிக முக்கிய வழக்காகப் … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. கனடாவின் அதிரடி முடிவு.. உலக நாடுகளுக்கும் பாதிப்பா?

உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது பேச்சு வார்த்தைக்கும் மத்தியிலும் இன்னும் பூதாகரமாகியுள்ளது. இது இன்னும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 30-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கண்ட நாடுகள் பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகின்றன. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை, ஸ்விப்ட் … Read more

ஜெர்மனி நிறுவனத்தின் அதிரடி முடிவு..ரஷ்ய நிறுவனத்துடனான வணிகம் வேண்டாம்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான தாக்குதலானது ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டுள்ளது. எனினும் இன்று இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ள நிலையில், சற்றே தாக்குதல் ஓய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இதற்கிடையில் உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என … Read more