அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் போட்ட தடை.. ரஷ்யாவுக்கு செக்.. புடின் அடுத்த திட்டம் என்ன?!

ரஷ்யா செவ்வாய் அதிகாலையில் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அதிகாரப்பூர்வமாகச் சுதந்திரம் அளித்துத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டார் அதிபர் விளாடிமிர் புடின். இதன் மூலம் ரஷ்யா போர் செய்யாமலேயே உக்ரைன் எல்லைக்குள் நுழைந்துள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா நிதியியல் தடை விதித்துள்ள நிலையில், தற்போது பிரிட்டனும் அமெரிக்காவுடன் கைகோர்த்துத் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது. ரஷ்யா கைப்பற்றிய 2 … Read more

அம்பானி முதல் பிர்லா வரை.. இந்திய பணக்காரர்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..?

இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புக் கொரோனா தொற்றுக் காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பெரும்பாலான பணக்காரர்கள் தங்களது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளனர். இந்தத் திடீர் வர்த்தக விரிவாக்கத்திற்கு ஒருபக்கம் சந்தையில் புதிதாகப் பல வர்த்தக வாய்ப்புகள் உருவாகியிருந்தாலும், இதேவேளையில் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் வர்த்தகத்தைத் தனியாக நிர்வாகம் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ள காரணத்தால் நாட்டின் முன்னணி பணக்காரர்கள் கடந்த 10 வருடத்தில் இல்லாதது போல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் … Read more

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சோகம்.. 18 மாத DA நிலுவை பெறுவதில் தாமதம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) அளவீட்டை கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு அடுத்தடுத்து மத்திய அரசு உயர்த்திய வந்த நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. மத்திய அரசின் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 18 மாதத்திற்கு அகவிலைப்படியை (DA) பெற்ற காத்திருக்கின்றனர். இந்த அரியர் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்துத் தற்போது … Read more

உலக நாடுகளின் கடன் தாறுமாறாக உயர்வு.. ஜப்பான், அமெரிக்கா படுமோசம்.. அப்போ இந்தியா..!

2020 இல் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து, உலக நாடுகளில் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு, பொருட்களுக்கான விலையில் கடுமையான ஏற்ற இறக்கம், வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் பாதிப்பு, சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கும் வருமானம் சரிவு, வர்த்தகம், உற்பத்தி பாதிப்பு என உலக நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தக் கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க உலக நாடுகளின் அரசு எப்போது இல்லாத வகையில் அதிகப்படியான கடனை பெற்றது உள்ளது. இதனால் வியப்படையும் … Read more

எல்ஐசி ஐபிஓ.. PMJJBY பாலிசிதாரர்களுக்கும் சலுகை கிடைக்கும்..!

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடானது இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்ஐசிபாலிசி தாரர்களுக்கு, மொத்த பங்கு வெளியீட்டில் 10% ஒதுக்கீடு செய்யப்படலாம். மேலும் பாலிசிதாரர்களுக்கு பங்கு விலையில் 5% தள்ளுபடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சலுகைகள் கிடைக்கும் இதற்கிடையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமும், எல்ஐசி பங்கு வெளியீட்டின் போது கொடுக்கப்படும் சலுகைகளுக்கு பொருந்தும் என எல்ஐசி-யின் தலைவர் எம் … Read more

7வது சம்பள கமிஷன்: மீண்டும் DA உயர்வு.. விரைவில் அறிவிப்பு வெளியாகும்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்ட சலுகை வழங்கியது மட்டும் அல்லாமல், ரத்து செய்யப்பட்ட காலத்திற்கு நஷ்ட ஈடாகவும் DA அளவீட்டைப் பெரிய அளவில் அதிகரித்தது இந்நிலையில் மத்திய அரசு, மீண்டும் அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி … Read more

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை. வாருங்கள் பார்க்கலாம். நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு ஜிஆர்எம் ஓவர்சீஸ் (GRM Overseas). இந்த பங்கானது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3455% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்கின் விலையானது பிப்ரவரி 21,2019 அன்று 14.99 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 … Read more

ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன?

நாட்டில் கொரோனாவின் தாக்கம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அழைப்பு விடுத்து வருகின்றன. குறிப்பாக ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் மார்ச் மாதத்தில் இருந்து அழைப்பு விடுக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ரூ.400 கோடிக்கு வீடு, 3 விமானம், ஏகப்பட்ட கார்.. ராஜ வாழ்க்கை வாழும் கௌதம் அதானி..! இதற்கிடையில் சமீப நாட்களாக பல செய்திகள் ஊழியர்களை மீண்டும் … Read more

5 நாட்களுக்குள் 9.1 லட்சம் கோடி இழப்பு.. போட்டதெல்லாம் போச்சே.. கதறும் முதலீட்டாளர்கள்..!

இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே சரிவில் இருந்து வரும் இந்த சந்தைகள், தற்போதும் கூட சரிவில் தான் காணப்படுகின்றன. எனினும் இன்று காலை 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டிருந்த சென்செக்ஸ், தற்போது 285.95 புள்ளிகள் குறைந்து, 57,415.52 புள்ளிகளாக காணப்படுகின்றது. இதே நிஃப்டி 85.2 புள்ளிகள் குறைந்து 17, 121 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சிபிஐ-யிடம் சிக்கிய அனந்த் சுப்பிரமணியன்.. சென்னையில் 3 நாட்களாக துருவித் துருவி கேள்வி..! இது ரஷ்யா – உக்ரைன் இடையேயான … Read more

3 வருடத்தில் 8 லட்சம் பேர் வெளியேற்றம்.. எல்ஐசி-யின் உண்மையான நிலை இதுதான்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கும், ஆதிக்கத்திற்கும் முக்கியப் பங்கு விகித்த எல்ஐசி ஏஜெண்ட்கள் தற்போது தொடர்ந்து வெளியேறி வருவதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட காத்து இருக்கும் எல்ஐசி நிறுவனத்திற்கும், எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யக் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..! எல்ஐசி நிறுவனத்தின் ராணுவம் எல்ஐசி நிறுவனத்திற்கு … Read more