பிரமிக்க வைக்கும் அறிக்கை.. அரசு பத்திரங்கள், ஈக்விட்டிகள், சேமிப்பு எல்லாவற்றிலும் LIC தான் டாப்!

இந்தியா வரலாற்றிலேயே எல்ஐசி (LIC ) பொது பங்கு வெளியீடானது மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் LIC பங்கு வெளியீடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது குறித்து ஒரு தரப்பு எல்ஐசி பங்கு வெளியீடானது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கின்றது. எனினும் ஒரு தரப்பு தங்க முட்டையிடும் வாத்தினை அரசு விற்பனை செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை செபியிடம் சமர்பித்த வரைவில், … Read more

தங்கம் விலை தொடர் ஏற்றம்.. இனி சாமானிய மக்கள் கனவில் தான் வாங்கணும் போல..?

ரஷ்யா -உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இது தொடர்ந்து முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! அதெல்லாம் சரி தற்போதைய சந்தை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? … Read more

அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அனில் அம்பானியின் பல தோல்விகள் மற்றும் சோகத்திற்கும் மத்தியில், அவருடைய மூத்த மகனான அன்மோல் அம்பானி-க்குத் திருமணம் நடக்க உள்ளது. பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அன்மோல் அம்பானி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிரிஷா ஷாவு உடனான திருமணம் அன்மோல் அம்பானி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..! அன்மோல் அம்பானி திருமணம் … Read more

ரூ.50,000 கோடி ஐபிஎல் திட்டம்.. அடித்துக்கொள்ளும் ரிலையன்ஸ், அமேசான்..!

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்-ஐ டாடா மிக முக்கியமான வர்த்தகத் திட்டத்துடன் கைப்பற்றிய நிலையில், ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுக்கான போட்டியாளர்களைச் சேர்வு செய்யும் ஐபிஎல் ஏலமும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்த முக்கியமான திட்டத்தைக் கைப்பற்ற முக்கியமான நிறுவனங்கள் போட்டிப்போடக் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்த 5 வருட ஐபிஎல் யாருக்கு.. களத்தில் இறங்கும் ரிலையன்ஸ், அமேசான்.. எகிரும் விலை..! ஐபிஎல் போட்டிகள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் … Read more

சென்னை, பெங்களூருக்கு போட்டியாக வரும் கேரளா.. பினராயி விஜயனின் புதிய 5 வருட திட்டம்..!

சமீபத்தில் இந்தியாவைப் பார்த்து வியந்துபோன ஐக்கிய அரபு நாடுகள், 2031க்குள் 20 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கத் துபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரள அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது மட்டுமல்லாமல் முக்கியமான இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது. அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..! கேரள அரசு கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) பிரிவு ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது ‘ஹடில் குளோபல் 2022’ நிகழ்ச்சியில் பேசிய கேரள … Read more

தள்ளுவண்டியில் டீ கடை திறந்த பிடெக் பட்டதாரிகள்.. சூடுபிடிக்கும் விற்பனை..!

கொரோனா தொற்று பல கோடி மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது போல் இந்த 3 பிடெக் பட்டதாரிகளின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு உள்ளது. ஒருபக்கம் படித்து முடித்து வேலைவாய்ப்புக் கிடைக்காமல் தவித்து வரும் மக்கள் மத்தியில், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்தால் எவ்வளவு பெரிய பாதிப்பை வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆனால் இந்த 3 பிடெக் பட்டதாரிகள் மனந்தளராமல் ஸ்மார்டாக யோசித்துச் சூப்பரான பெயரும் டீ கடையைத் திறந்து இன்று இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர். EPFO: … Read more

EPFO: உங்க அடிப்படை சம்பளம் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் உள்ளதா..? வருகிறது புதிய திட்டம்..!

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, மாதத்திற்கு 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இன் கீழ் இல்லாத வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வகைப்படுத்தப்பட்ட துறையில் பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 15000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்கள் அனைவரும் EPS-95 கீழ் கட்டாயம் சேர்க்கப்படுவார்கள். மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. … Read more

மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. ஐடி ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறைகள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில், ஐடி துறையும் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி துறையில் 4.5 லட்சம் ஊழியர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 20 வருடங்களில் இல்லாத மோசமான நிலை.. ஆனா ஐடி துறையினருக்கு ஜாக்பாட் தான்..! வொர்க் பரம் ஹோம் … Read more

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. தங்கம் விலை சரிய இதுதான் காரணம்..!

சர்வதேச முதலீட்டுச் சந்தைக்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வந்த ரஷ்யா உக்ரைன் பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ரஷ்யா – ஜெர்மனி உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் 2வது கட்டமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக இருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை அமெரிக்க அதிபரான ஜோ … Read more

சீன செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மை..!

இந்தியா – சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பும் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் இயங்கி வரும் சீன மொபைல் செயலிகளைத் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாக அடுத்தடுத்துத் தடை செய்து வருகிறது. இந்தத் தடை உத்தரவால் இந்தியாவுக்கும், இந்திய மொபைல் செயலி நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளும், நன்மைகளும் உருவாகியுள்ளது. இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..! சீன செயலிகள் தடை 2020ஆம் ஆண்டிலேயே 100க்கும் அதிகமாக மொபைல் செயலிகள் பல கட்டங்களாகத் … Read more