‘ஹிலால்-இ-பாகிஸ்தான்’ பில் கேட்ஸ்-க்கு உயரிய விருதை கொடுத்த பாகிஸ்தான்.. எதற்காக தெரியுமா..?!

உலக நாடுகள் பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் வெளிநாட்டவர்களுக்கு அளிப்பது வழக்கம், அந்த வகையில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு இந்த அண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய நன்கொடையாளராக இருக்கும் பில் கேட்ஸ்-க்கு அந்நாட்டின் 2வது உயரிய விருதான ஹிலால்-இ-பாகிஸ்தான் என்னும் விருதை அளித்துள்ளது. இந்த உயரிய விருது எதற்காக அளிக்கப்பட்டது என்பது தான் தற்போது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார மற்றும் வர்த்தகம் … Read more

எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?

இந்திய பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டும் வரும் நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக மார்ச் மாதம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் உயர்த்த இருக்கும் வட்டி விகிதம், ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை ஆகியவை முதலீட்டு சந்தை புரட்டி போட்டு வரும் நிலையில் தற்போது மும்பை பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டில் அதிகப்படியான இழப்பைச் சந்தித்து கொண்டு இருக்கும் இந்தியச் … Read more

ரூ.7,500 கோடிக்கு ரோபோ வாங்கும் ரிலையன்ஸ்.. அம்பானி திட்டம் என்ன..?

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான வர்த்தகக் குழுமத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது உற்பத்தி, சேவை, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல பிரிவுகளில் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் தனது அஸ்திவாரமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம். ரிலையன்ஸ் ரீடைல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சமீபத்தில் அட்வெர்ப் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தில் 132 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து சிறிய … Read more

பிப்ரவரி 28-க்குள் இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்கணுன்னா இது கட்டாயம்.. !

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு சில கண்டிசன்களையும் போட்டுள்ளது. அதென்ன கண்டிசன். இதனால் என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம். சும்மா கிடக்கும் ரூ.21500 கோடி பணம்.. எல்ஐசி-க்கு இது ஜாக்பாட் தானா..? பாலியுடன் பான் இணைப்பு எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் … Read more

ஹைப்ரிட் மாடல்: ஐடி நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் பழைய நிறுவனங்கள்..!

கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, குறிப்பாக நிறுவனங்களில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, ஹைப்ரிட் மாடல், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகம், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும்.. இப்படி நிறுவனங்கள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஐடி, டெக் அல்லது புதிதாக உருவாகிய நிறுவனத்தில் தான் அதிகம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போ மற்ற நிறுவனங்கள்…? மாத சம்பளகாரர்களுக்கு … Read more

புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..!

கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமான துறை ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகள் முதல் விற்பனை வரையில் அனைத்தும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனாலேயே மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகப்படியான சலுகையை அறிவித்தது. மேலும் பல மாநிலங்கள் பத்திர பதிவு கட்டணத்தில் அதிகப்படியான சலுகையை அறிவித்தது. இதோடு ரியல் எஸ்டேட் கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான கடன் அளிக்கப்பட்ட காரணத்தால் வேலைவாய்ப்பு முதல் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது. … Read more

டெஸ்லாவுக்கு மீண்டும் கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா.. வசமாக சிக்கிய எலான் மஸ்க்..!

அமெரிக்காவின் வாகன பாதுகாப்பாளர்கள் டெஸ்லாவினை மீண்டும் தனது விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த முறை இதற்கான வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி, வாகனங்கள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் Y கார் குறித்து தான் தற்போதும் பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த கார்கள் குறித்து 354 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. … Read more

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.6% ஆக சரிவு.. ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறையின் முன்னணி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை பெற துவங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து மீண்டு வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தப்படாத துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் வேலைவாய்பின்மை ஜனவரி மாதத்தில் சரிந்துள்ளது. 4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ஜனவரி மாதம் … Read more

இந்தியாவில் மாஸ்-ஆ களமிறங்கிய மாஸா.. எப்படி தெரியுமா?

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நமது ஊர்களில் ஆங்காங்கே சிறு கடைகள் முளைத்து விடும். பழக்கடைகள், ஜூஸ் கடைகள், வெயிலை தணிக்கும் மோர், கூழ் இப்படி ஏராளமானவற்றை பார்க்கலாம். இப்படி ஏராளமானவற்றிற்கும் மத்தியில் மாஸா, கோகா கோலா என பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகளும் களை கட்டும். வியாபாராம் கல்லா கட்டும். இப்படி மக்கள் விரும்பி குடிக்கும் குளிர்பானங்கள் என்னென்ன? குறிப்பாக இந்தியர்கள் அதிகம் விரும்பும் பானம் எது? அதன் விற்பனை எப்படி? வாருங்கள் பார்க்கலாம். அசைக்க … Read more

அசைக்க முடியாத சீன நிறுவனங்கள்.. 2 வருடத்தில் மொத்தமும் மாறியது..! #Xiaomi

இந்திய சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு மோடி அரசு சீனாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. குறிப்பாக முதலீட்டுக்குத் தடை, சீன செயலிகளுக்குத் தடை, சீன உற்பத்தி நிறுவனங்கள் கண்காணிப்பு எனப் பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்திய சீனா எல்லையில் இருநாட்டு ராணுவத்திற்கு மத்தியில் நடந்த தாக்குதலின் போது கூட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சியோமி தனது MI பிராண்டை மேக் இன் இந்தியா என்று கூட … Read more