கர்நாடகாவில் தயாரிக்க‌ப்படும் பொருட்களில் கன்னடம் கட்டாயம்: முதல்வர் சித்தராமையா உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களிலும் கன்னட மொழியில் அதன் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் தலைமையிலான அரசு கன்னட மொழி, நீர், நிலம் ஆகியவற்றில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது. நான் பதவியேற்றதில் இருந்தே கன்னட மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கன்னடர்களுக்கும், கன்னட மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது … Read more

மீனவர் பிரச்சினை | இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும்: அண்ணாமலை

ராமேசுவரம்: மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகேசன் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று ராமநாதபுரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களுக்கு காலையில் எழுந்ததும் என்னை திட்டுவது தான் முதல் வேலை. யார் அதிகமாக திட்டுவது என்பது தான் அவர்களுக்குள் போட்டி. மேடையை … Read more

உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலை. வளாகத்தில் பிளஸ்1 மாணவர் சுட்டுக் கொலை!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் பெருகுவதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சுமார் 150 வருட பழமையான இந்த மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிகளும் உள்ளன. அதில் ஒரு பள்ளியான ஏபிகே யூனியன் பள்ளியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் ப்ளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். … Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. … Read more

“சமூகத்தில் அமைதி, நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்” – ரம்ஜான் நோன்பு தொடக்கம்; பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்திக்கு அடையாளமாக இருக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவை செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது.” என்று கூறியுள்ளார். இஸ்லாமிய ஆண்டின் … Read more

“சீமான் வீட்டிலும் கட்சியிலும் உள்ள பெண்கள் கேள்வி கேட்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. 

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பெண்கள் குறித்து சீமான் பேசியது பற்றி அவர் வீட்டில் உள்ள பெண்களும், அவரது கட்சியில் உள்ள பெண்களும் கேள்வி கேட்க வேண்டும் என கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி நடிகை விஜயலட்சுமி போலீஸில் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் சீமானிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து வந்த சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து தெரிவித்த கருத்துகள் … Read more

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: எம்எல்ஏக்களுக்கு சந்திரபாபு அறிவுரை

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள கங்காதரநெல்லூர் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயனாளிகள் சிலருக்கு மாத உதவித் தொகையை நேரில் வழங்கினார். பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா வேதிகா’ எனும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆட்சியில் மிகுந்த சிரமத்துக்கு ஆளான மக்கள் இம்முறை நமது கூட்டணி வாக்களித்துள்ளனர். எனவே தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் அவர்களின் பிரச்சினைகளை … Read more

38 அறிஞர்களுக்கு தமிழ் செம்மல் விருது: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 38 பேருக்கு 2023-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான விருதாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபடும் அறிஞர்கள், ஆர்வலர்களின் தமிழ் பணியை பாராட்டும் விதமாக தமிழக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான … Read more

பாஜக புதிய தேசிய தலைவரை இம்மாதம் தேர்ந்தெடுக்க திட்டம்

புதுடெல்லி: மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் அமைப்பு விதிகளின்படி தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது, 36 மாநிலங்களில் 12-ல் மட்டுமே தேர்தல்கள் முடிந்துள்ளன. … Read more

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை … Read more