“சமூகத்தில் அமைதி, நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்” – ரம்ஜான் நோன்பு தொடக்கம்; பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்திக்கு அடையாளமாக இருக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவை செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது.” என்று கூறியுள்ளார். இஸ்லாமிய ஆண்டின் … Read more

“சீமான் வீட்டிலும் கட்சியிலும் உள்ள பெண்கள் கேள்வி கேட்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. 

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பெண்கள் குறித்து சீமான் பேசியது பற்றி அவர் வீட்டில் உள்ள பெண்களும், அவரது கட்சியில் உள்ள பெண்களும் கேள்வி கேட்க வேண்டும் என கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி நடிகை விஜயலட்சுமி போலீஸில் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் சீமானிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து வந்த சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து தெரிவித்த கருத்துகள் … Read more

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: எம்எல்ஏக்களுக்கு சந்திரபாபு அறிவுரை

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள கங்காதரநெல்லூர் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயனாளிகள் சிலருக்கு மாத உதவித் தொகையை நேரில் வழங்கினார். பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா வேதிகா’ எனும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆட்சியில் மிகுந்த சிரமத்துக்கு ஆளான மக்கள் இம்முறை நமது கூட்டணி வாக்களித்துள்ளனர். எனவே தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் அவர்களின் பிரச்சினைகளை … Read more

38 அறிஞர்களுக்கு தமிழ் செம்மல் விருது: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 38 பேருக்கு 2023-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான விருதாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபடும் அறிஞர்கள், ஆர்வலர்களின் தமிழ் பணியை பாராட்டும் விதமாக தமிழக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான … Read more

பாஜக புதிய தேசிய தலைவரை இம்மாதம் தேர்ந்தெடுக்க திட்டம்

புதுடெல்லி: மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் அமைப்பு விதிகளின்படி தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது, 36 மாநிலங்களில் 12-ல் மட்டுமே தேர்தல்கள் முடிந்துள்ளன. … Read more

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை … Read more

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்

புதுடெல்லி: அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதிடுகையில், … Read more

‘செட்’ தேர்வு: தலைமை செயலர் ஆலோசனை

சென்னை: கல்லூரி பேராசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார். மாநிலத் தகுதித் தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு வரும் மார்ச் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் பயிற்சி தேர்வுக்கான … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று முன்தினம் காலை 5.30 மணி முதல் 6 மணி வரை கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை … Read more

எஸ்.சி, எஸ்.டி அரசுப் பணியாளர் பதவி உயர்வு மசோதா தயாராக இருப்பதாக திருமாவளவன் தகவல்

சென்னை: மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியவது: “அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்து போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக இருக்கிறது. எதிர்ப்பு மனநிலையை … Read more