இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை … Read more

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்

புதுடெல்லி: அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதிடுகையில், … Read more

‘செட்’ தேர்வு: தலைமை செயலர் ஆலோசனை

சென்னை: கல்லூரி பேராசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார். மாநிலத் தகுதித் தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு வரும் மார்ச் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் பயிற்சி தேர்வுக்கான … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று முன்தினம் காலை 5.30 மணி முதல் 6 மணி வரை கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை … Read more

எஸ்.சி, எஸ்.டி அரசுப் பணியாளர் பதவி உயர்வு மசோதா தயாராக இருப்பதாக திருமாவளவன் தகவல்

சென்னை: மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மசோதா தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியவது: “அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்து போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக இருக்கிறது. எதிர்ப்பு மனநிலையை … Read more

சூரத் ஜவுளி சந்தை தீ விபத்தில் ரூ.850 கோடி பொருட்சேதம்: 20 கோடி ரூபாய் நோட்டுகளும் எரிந்து சாம்பலாகின

சூரத்: குஜராத்தின் சூரத் நகர் ஜவுளி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.850 மதிப்பு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. 20 கோடி ரூபாய் நோட்டுகளும் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன. கடந்த 1996-ம் ஆண்டில் குஜராத்தின் சூரத் நகரின் ரிங் சாலையில் பூபத் படேல், அருண் படேல் ஆகியோர் 6 மாடி கட்டிடத்தை கட்டினர். இந்த கட்டிடத்தில் 822 கடைகள் செயல்பட்டன. இது சிவசக்தி ஜவுளி சந்தை என்று அழைக்கப்பட்டது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இந்த சந்தைக்கு … Read more

அனைத்து கட்சி கூட்டத்தில் அமமுக பற்கேற்கும்: டிடிவி.தினகரன் தகவல்

திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்த உள்ள அனைத்துக் கட்சித் கூட்டத்தில் அமமுக பங்கேற்கும். தமிழக சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அதிமுகதான். ஆனால், மக்கள் மன்றத்தில் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? திமுகவுக்கு பயந்து கொண்டு பழனிசாமி அடக்கி வாசிக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படிதான் சீமான் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் குறித்து … Read more

கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 1,000 விஐபிகள் வருகை

புதுடெல்லி: கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சுமார் 1,000 முக்கியப் பிரமுகர்கள் (விஐபிகள்) வருகை புரிந்துள்ளனர். 7 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், 190 நீதிபதிகள் என இவர்களின் பட்டியல் நீள்கிறது. உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கி 45 நாட்கள் நடைபெற்றது. இந்த 45 நாட்களில் கும்பமேளாவுக்கு வருகை புரிந்த 953 விஐபிகள் அருகிலுள்ள வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் வந்தனர். இது தொடர்பான விவரம் வாராணசி மாநகர காவல் … Read more

வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி கடும் வாக்குவாதம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனால் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கும் எதிராகவும் அமெரிக்கா கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ரஷ்யா ராணுவத்தை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்களை கொடுத்து உதவியது. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் … Read more

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் மார்ச் 5-ல் தொடக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

அவிநாசி: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரையில் `வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின் 11-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘சூழலியல் மாற்றத்தில் தொழில்முனைவோர் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்மொழிக் … Read more