‘நீட்’ குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுதோறும் தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, நீட் தேர்வை ரத்து … Read more