விவசாயிகளுக்காக கேஜ்ரிவால் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
விவசாயிகளுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு காங்கிரஸ் வலுவான ஆதரவு அளித்ததால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு ஏற்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேறின. இதையடுத்து அந்த சட்டங்களுக்கான அறிவிக்கையை முதல் … Read more