டெல்லி பனி மூட்டம்: 9 மணி நேர காட்சித்தெளிவின்மையால் 400 விமானங்கள், 81 ரயில்களின் சேவை பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியில் சுமார் ஒன்பது மணிநேரத்துக்கு அடர் பனி நீடித்தது. இந்த ஆண்டின் பனி காலத்தின் மிக நீண்ட பனி தொடர்பான இடையூறு இது. டெல்லியின் பாலத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம், எதிரில் … Read more

‘பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ – திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் … Read more

சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஒரு காவலர் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் – தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை (ஜன. 4) ஈடுபட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் … Read more

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை கவர்ந்த ‘சிறை சந்தை’ – என்ன ஸ்பெஷல்? 

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் விற்கப்படும் சிறை கைதிகள் தயாரித்த பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சிறைச் சந்தைக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சிறைச் சந்தையில் கைதிகளின் கை வண்ணத்தில் உருவான நல்லெண்ணெய், … Read more

ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாதம்: ஐஜேஎஸ் நடத்திய ஆய்வில் தகவல்

நாட்டில் ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆனால் 4-ல் ஒரு இந்தியர் மட்டுமே பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பக்கவாத பாதிப்பு மற்றும் அதற்கான சிகிச்சை வசதி எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய ஆய்வை சிகாகோவைச் சேர்ந்த அசென்சன் சுகாதார மைய மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் ஐதராபாத் மருத்துவர் அருண் மித்ரா ஆகியோர் நடத்தினர். இந்த ஆய்வறிக்கை ‘இன்டர்நேசனல் ஜேர்னல் ஆஃப் ஸ்ட்ரோக் (ஐஜேஎஸ்) … Read more

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை … Read more

வீடியோவில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த என்ஆர்ஐ மீது வழக்கு

நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சீவுட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நவி மும்பையில் உள்ள என்ஆர்ஐ மீது போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு ஆகிப் படிவாலா என்பவரை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். கணவர், அவரது குடும்பத்தினருடன் நாங்கள் பிரிட்டனுக்கு சென்றோம். பிரிட்டனில் கணவர் வேலை செய்கிறார். அங்கு சென்ற பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் என்னை அதிகமாக சித்ரவதை செய்தனர். என்னுடைய … Read more

அனுபவமற்ற தொழிலாளர்கள், அளவுக்கு அதிகமான வெடிபொருள் – விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஆலை உரிமையாளர்கள், மேலாளர், போர்மேன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 2 பேரை கைது செய்தனர். சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 80 அறைகள் உள்ளன. இதில் 40 … Read more

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை மூத்த அதிகாரி மற்றும் தெற்கு மத்திய ரயில்வே மூத்த அதிகாரி மீது சிபிஐ வழக்குகளை பதிவு செய்தது. இதை எதிர்த்து இரு அதிகாரிகளும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தெலங்கானா அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிபிஐ … Read more

பொங்கலுக்காக 9 நாள் விடுப்பு கிடைக்க வாய்ப்பு: ஜன.17 விடுமுறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன. 17-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜன. 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதற்கு … Read more