டெல்லி அரசை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்தலில் வாக்கு கேட்கிறது: அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி அரசினை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்லில் வாக்கு கேட்கிறது என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட டெல்லி உள்கட்டமைப்புக்கான இரண்டு மைல்கல் திட்டங்கள் மத்திய அரசு மற்றும் டெல்லி நகர நிர்வாகத்தின் கூட்டு முயற்சி என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ” ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கலகம் மட்டுமே செய்கிறது … Read more

சில நிமிடங்களில் முடிந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு – பொதுமக்கள் ஏமாற்றம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில், முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதனால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜன.15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி … Read more

சாகும் வரை உண்ணாவிரதத்தின் 4ம் நாள் – ராகுல், தேஜஸ்வி ஆதரவினை கோரும் பிரசாந்த் கிஷோர்!

பாட்னா: பிபிஎஸ்சி(Bihar Public Service Commission) தேர்வினை ரத்து செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், இந்தப் போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ஆதரவினை கேரியுள்ளார். பிஹாரின் காந்தி மைதானத்தில், ‘அம்ரான் அன்சான்’ என்று சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

இந்து பெண்களுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டிய இந்து முன்னணி மாநில செயலாளர் கைது

திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி … Read more

‘‘பிரியங்காவின் கன்னத்தை போல சாலைகள் இருக்கும்’’ – பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் வாக்குறுதிக்கு காங்., கண்டனம்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல வழவழப்பானதாக ஆக்குவேன் என்று கல்காஜி தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி கூறியது சர்ச்சையாகியுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் எம்பியும், பாஜக வேட்பாளருமான ரமேஷ் பிதுரி, “பிஹாரின் சாலைகளை ஹேமா மாலினியின் கன்னங்கள் போல சீராக மாற்றுவேன் என்று லாலு பிரசாத் யாதவ் ஒருமுறை சொன்னார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். நான் … Read more

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றை கொண்டியிங்கும் தமிழ் சமூகத்தின் மொழியின் சீரிளமையின் திறனை, மொழி ஆராய்ச்சி உலகம் வியந்து பார்த்து வருகிறது. ”யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் … Read more

‘‘மாநில அரசு என்ற பெயரில் பேரழிவையே டெல்லி கண்டது’’ – ஆம் ஆத்மி கட்சி மீது பிரதமர் தாக்கு

புதுடெல்லி: மாநில அரசு என்ற பெயரில் டெல்லி மக்கள் பேரழிவையே (AAP-DA) கண்டார்கள் என்று ஆம் ஆத்மி அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் மோடி, வரும் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிவர்தன் பேரணியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டெல்லியை நாம் மாற்றவேண்டும். டெல்லியின் வளமான எதிர்காலத்துக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் வாய்ப்பளிக்க … Read more

‘‘2025-ல் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?’’: அன்புமணி கேள்வி

சென்னை: 2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு … Read more

டெல்லி பேரவைத் தேர்தல் | ‘மாப்பிள்ளை யார்?’ என்ற ஆம் ஆத்மியின் கேலிக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்க விருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையே சமூக வலைதளங்களில் புதிய மோதல் உருவாகியுள்ளது. பாஜகவுக்கு முதல்வர் முகமில்லை என ஆம் ஆத்மி கேலி செய்ய, பேரழிவு என்று பாஜக எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி அதன் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜானவாச குடையுடன் மாப்பிள்ளை அழைப்புக்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் மாப்பிள்ளை இல்லாத நிலையில் வலம் … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகள் ரத்து

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை பெருநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 78 வயது மூதாட்டியான மனோரமா ஹிதேஷி என்பவர் சென்னை பெருநகர 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறேன். ஆனால் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், செல்லப் பிராணிகள் பொது வெளியில் மலம் கழித்தால் … Read more