முதலாவது நதிகள் இணைப்புத் திட்டம்: கென்-பேட்வா நதிகளை இணைக்க நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை(டிச. 25) அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு … Read more

‘எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா?’ – அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்

சென்னை: “மத அரசியல் செய்யாத மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியாது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியுடன் எம்ஜிஆரை ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதனை கடுமையாக எதிர்க்கும் விதமாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘மத அரசியல் செய்யாத எம்ஜிஆரை, மோடியுடன் … Read more

தேர்தல் நடத்தை விதிகள் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் மத்திய அரசு சமீபத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இந்த திருத்தங்களுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று காங்கிரஸ் … Read more

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரியும், அடையாளம் தெரியாத இலங்கை நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (டிச.24) எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (டிச.24) சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த … Read more

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​படவில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடர்வார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில், நேற்று முன்தினம் ஆளுநர் ரவி டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்​றுள்​ளனர். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், … Read more

‘அமித்ஷாவும், பிரதமர் மோடியும் வேறுவேறு அல்ல; ஒரே குழல் ஊதும் நபர்கள்தான்’ – கே.வி.தங்கபாலு

சென்னை: அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வேறு அல்ல இருவரும் ஒரே குழல் ஊதும் நபர்கள்தான் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கக் கோரியும் உடனடியாக அவரை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியாளர்களைச் சந்தித்து குடியரசு தலைவருக்கு … Read more

“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி; அரசோ கும்பகர்ணன் போல் தூங்குகிறது” – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ கும்பகர்ணன்போல் தூங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறிச் சந்தைக்கு சமீபத்தில் சென்ற ராகுல் காந்தி, பொதுமக்கள் மற்றும் காய்கறி கடைக்காரர்களுடன் உரையாடினார். அப்போது, விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஏழை எளிய மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். … Read more

‘அன்பும், சகிப்புத்தன்மையும் தான் இன்றைய உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்’ – அன்புமணி கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: “இன்றைய உலகுக்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்திவாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் … Read more

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் மீண்டும் சம்மன்

ஹைதராபாத்: கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் சிக்கடப்பள்ளி போலீஸார் அனுப்பிய புதிய சம்மனை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிறார். இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் இது அரசியல் பழிவாங்கல் என ஆளும் காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. நடந்தது என்ன? அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா … Read more

‘மனிதாபிமானம், சேவை மனப்பான்மை கொண்டவர்கள்’ – கிறிஸ்துமஸ் வாழ்த்தில் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி

சென்னை: “மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு,செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், “கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது.” என்று பாஜகவை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிச.24) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்றைய பாஜக … Read more